Archive for October 14th, 2008

14-10-2008 & 15.10.2008 Post Market

     அமெரிக்க சந்தை ஒரே நாளில் 900 புள்ளிகளுக்கு மேலே ஏறியுள்ளது.  தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் ஏறுமுகமாகவே தொடங்கியுள்ளன.  எனினும் நேற்றைய உற்சாகம் அவற்றில் குறைவதை காண்கிறேன்.
 
     நமது சந்தை இன்றும் Positive Gaaaaaaap up துவங்கும்.  ஒரளவு சந்திக்கக் கூடும்.  முடிவு +45 முதல் +105 வரை இருக்கக் கூடும்.  இனி ஒரு ஸ்திரமான மத்திய அரசு அமையும் வரை நமது சந்தை தின வணிகர்களின் சந்தையே.  Volume  மிகவும் குறைவாக இருக்கிறது. 

     அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்ற வண்ணம் இருக்கிறார்கள்.  வரும் தீபாவளியையொட்டி, நமது முதலீட்டாளர்களும் விற்கக் கூடும். 

     வழக்கம்போல் மாலை விரிவாக எழுதுகிறேன்.

Good Morning!

Post Market:

     இன்றைய சந்தையில் அதிகமாகி சந்தை 100 புள்ளிகளை இழந்திருக்கிறது.  தற்போதைய நிலவரப்படி, என்ன நல்ல செய்திகள் வந்தாலும் சந்தை 4000-தாண்ட போவதில்லை என்றே படுகிறது.  முதலில் நான் கொடுத்த இலக்கான 2875-ஐ நோக்கி பயணிக்கும் என தோன்றுகிறது.  நீண்ட கால முதலீட்டிற்கு வேண்டுமானால் சில பங்குகள் பரிந்துரைகளை இந்த வாரத்தில் தர முயற்சிக்கிறேன்.  நேரம் தான் நிறைய இருக்கிறதே!  தற்சமயம் துவங்கியிருக்கும் அமெரிக்க சந்தை 300 புள்ளிகள் அதிகமாக துவங்கியிருக்கிறது.  நாளடைவில் சரிய தொடங்கலாம் என எதிர்பார்க்கிறேன். 

    தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை (15.10.2008) சந்தை நிலவர பதிவினை பதிவேற்ற இயலாத சூழ்நிலை. எனினும் Post Market  மாலை எழுதுகின்றேன்.

15.10.2008 Post Market

     நேற்றைய தினம் அமெரிக்க சந்தை 300 புள்ளிகளிலிருந்து -75 புள்ளிகள் வரை இறங்கி முடிந்ததால், நமது சந்தை ஒரு பயத்துடனே துவங்கிற்று.  தற்போதைய சந்தையில் நிறைய வதந்திகள் உலவி வருவதால், எல்லோரும் ஒரு விதமான படபடப்புடன் வணிகம் செய்வதை காணமுடிகிறது. 

       நமது சந்தை 3300 என்ற நிலையில் முடிந்திருக்கிறது.  இன்றும் அமெரிக்க சந்தை -300 புள்ளிகளை தற்சமயம் வரை இழந்திருக்கிறது.  400 புள்ளிகள் வரை சென்று, சிறிதளவு மீட்சியடையும் என எதிர்பார்க்கிறேன்.

பார்க்கலாம்.

5 comments October 14, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031