Archive for October 13th, 2008

13-10-2008

      ஒரு மோசமான வாரம் முடிந்து இரு நாட்கள் இடைவெளி விட்டு இன்று புதிய வாரத்தின் முதல்நாள்.   இயற்கையாகவே போன வாரத்தை இன்றைய நாள் முடிவதற்குள் முதலீட்டாளர்கள் மறந்து காளைகள் மீண்டும் திரும்பி விட்டனர் என கூத்தாட போவதை நாம் இன்று பார்க்க போகிறோம்.

     ஆசிய சந்தைகள் ஒரளவு பச்சையாக காணப்படுகின்றன.  நம்முடைய சந்தை இன்று +75 புள்ளிகளுக்கு மேல் ஆக தொடங்கும் என எதிர்பார்க்கின்றேன்.   ஆனால் சென்ற வாரத்து பயம் இன்னும் முதலீட்டாளர்களிடம் இருப்பதால், அது உடன் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.   நண்பகலில் தொடங்கும் ஐரோப்பிய சந்தைகள் Positive ஆக தொடங்கினால், நமது சந்தை மீண்டும் மேலேற வாய்ப்பு உண்டு.

     இந்த நேரத்தில் இருவிதமான அறிவுரைகள் வழங்கப்படுவதுண்டு. Sell at Rise   அல்லது Buy at Bottom . இரண்டையுமே பின்பற்றாமல் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதனை செயல்படுத்துங்கள்.  சந்தையின் முடிவு +95 முதல் +30-க்குள் முடிய வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன்.

    இன்று மாலை விரிவாக எழுதுகிறேன்.

Good Morning and Have a Good Day!

Post Market :

     200 புள்ளிகளுக்கு மேல் நமது சந்தை முடிந்திருக்கிறது. ஊடகங்களில் கிளம்பிய உற்சாகத்தை பார்த்திருப்பீர்கள்.  அடுத்த இரு மாதங்களில் முக்கிய பண்டிகைகள் வருகின்றன.  தீபாவளி, கிறிஸ்மஸ், புதிய வருட பிறப்பு.  நமக்கு எப்படியோ, அயல்நாட்டவருக்கு கடைசி இரு பண்டிகைகளையும் பெருத்த செலவில் கொண்டாடுவார்கள்.  கொண்டாட தேவை : பணம். 

    வெள்ளியன்றே நிறைய பேர் தங்கள் பங்குகளை சந்தை சரிய வாய்ப்பிருப்பதாக கருதி விற்று விட்டார்கள்.  இது உலகளவில் நடந்ததால், இன்றைய தினம் short covering தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.  வரும் வாரங்களில் சந்தை consolidate ஆக முயலும்.  3300-3500 என்பது மேலும் சரியும் என்றே நான் நினைக்கிறேன். 

   நிப்டி பங்குகளில் பல புதிய சப்போர்ட்களை கண்டுள்ளது.   தற்போது ஆரம்பித்திருக்கிற அமெரிக்க சந்தையும் நம் சந்தையை போல short covering  ஆரம்பித்திருக்கிறது.  ஆசிய சந்தைகள் நாளை தடுமாறும் என்றே நினைக்கிறேன்.  பார்க்கலாம்.

5 comments October 13, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

October 2008
M T W T F S S
« Sep   Nov »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031