Archive for October 3rd, 2008
03-10-2008
நேற்றைய மற்றும் இன்றைய அமெரிக்க, ஆசிய சந்தைகள் சரிவடைந்தே காணப்படுகின்றன. ஐரோப்பிய சந்தைகளும் ஆட்டம் கண்டுள்ளன. Bailout திட்டம் அமெரிக்க சபையில் நிறைவேற்றி பிறகும் முதலீட்டாளர்களிடம் ஒரு வித பயம் இருக்கின்றது. அமெரிக்க நிதி நிறுவனங்கள் இனி எல்லாம் நல்லபடியாகதான் நடக்கும் என அலறிக் கொண்டிருந்தாலும், மக்கள் அதை நம்ப தயாராக இல்லை.
இன்றைய தினம் வெள்ளிக் கிழமை. வாரத்தின் கடைசி நாள் என்பதால், நம் சந்தையிலும் ஆரம்பத்தில் நிறைய Selling Pressure, Short Positions உண்டாகக் கூடும். முதலீட்டாளர்கள் வாங்க விருப்பம் காட்டாவிட்டால், சந்தை மேலும் கீழே இறங்கக் கூடும். சந்தை ஆரம்பத்தில் Selling Pressure கடும் உருவாகி, நாளின் நண்பகல் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. (வானிலை அறிக்கை மாதிரி இருக்கின்றதா, என்ன செய்றது, சந்தையும் அப்படி ஆகிவிட்டது).
அரசிடமிருந்து ஏதேனும் நல்ல செய்திகள் மற்றும் இன்றைய ஐரோப்பிய சந்தைகளின் Positive Opening இவைகளை பொறுத்தே இறங்கிய புள்ளிகளை மீள செய்யக் கூடும்.
Have a Happy Weekend!
Post Market:
அமெரிக்க வங்கிகள் திவாலான வேகம் பார்த்து உலக முதலீட்டாளர்கள் அனைவரும் ஒரளவு திகிலடைந்திருக்கின்றார்கள். சப்-பிரைம் பிரச்சினை….. இரண்டு மாதம்…….பேர் ஸ்டெயின்ஸ் திவால் ………முன்று மாதம் …….வரிசையான திவால்கள்.
அதனால் உலக சந்தைகள் வலுவடைந்து முன்னேற குறைந்தது ஆறு மாதமாகவது ஆகும். அதுவரை கரடிகள் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும். சின்ன சின்ன நல்ல செய்திகளுக்கு காளைகள் react செய்வார்கள் என நம்பலாம். நமது சந்தையில் பார்த்தோமென்றால் நிப்டி குறியீட்டை மட்டுமே கூர்ந்து கவனிக்கலாம். சென்செக்ஸ் இரண்டாம் பட்சம்தான். ஏன் சொல்லுங்கள்?
நிப்டி 2875-4400 என்பதே குறைந்த பட்ச, அதிக பட்ச முன்னேற்றமாக இருக்கும் என நான் தற்சமயம் நினைக்கின்றேன். நன்றாக கவனிக்கவும், தற்சமயம் மட்டுமே.
4 comments October 3, 2008