Archive for September, 2008

சக்கரகட்டி – திரை விமர்சனம்

          சக்கரகட்டி படத்தில் வரும் “டாக்ஸீ,டாக்ஸீ” பாடல் Super Hit ஆனதை தொடர்ந்து அந்த பாடலை  re-shoot செய்திருக்கிறார்கள். படத்தையும் re-shoot செய்திருக்கலாம். அவ்வளவுதான்.

18 comments September 26, 2008

26-09-2008

     அமெரிக்க அரசு கொண்டு வந்த Bailout Plan -செனட் அங்கீகாரத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. எப்படியும் அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க சந்தை நேற்று +300 மேலேறியது. ஆனால், அங்கும் எதிர்கட்சிகள் இருப்பதால் 196 புள்ளிகள் மட்டுமே உயர முடிந்தது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அந்த சந்தேகத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.

    நம் சந்தையை பொறுத்தவரை இன்று ஆரம்பத்தில் gap up ஆக தொடங்கினாலும், சிறு முதலீட்டாளர்கள் சந்தையை ஏறவிடாது Profit-booking or loss-booking செய்ய ஆரம்பிப்பார்கள். இந்த வாரக்கடைசியில் மேற்சொன்ன Bailout Plan நிறைவேற்றப்பட்டால் அடுத்த வாரம் முதல் சந்தை 4400 என்ற நிலையை சந்திக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தற்சமயம் இருப்பது ஒரு Gamble Plan மட்டுமே. இன்றைக்கு சந்தை ஏறும்போதே விற்று விட்டு வெளியேறுவது நல்லதா அல்லது இரண்டு நாட்கள் காத்திருந்து கூடுதல் இலாபத்திற்கு விற்பதா என்ற இரு முடிவுகளே உள்ளன.

     என்னுடைய தனிப்பட்ட கணிப்பு என்னவென்றால், அமெரிக்க அரசு தன்னுடைய கடைசி ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற நிதி சீர்குலைவுடன் வெளியே செல்ல விரும்பாது. மேலும், அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகம். அவர்கள் ஒட்டு கிடைக்காது. எதிர்கட்சிகள் இதை எதிர்த்தாலும், அவர்கள் ஆதரவு கொடுத்தே ஆகவேண்டும்.

     இன்றைய தினம் சந்தை உயரவே வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன். +75 புள்ளிகளுக்கு மேல் உயர வாய்ப்புள்ளது.

    இன்று “காதலில் விழுந்தேன்” வெளியாகின்றது. சன் டிவி வாங்கியிருப்பதால், ஏகப்பட்ட விளம்பரங்களுக்கிடையில் வெளியாகிறது. படத்தின் தரம் எப்படி என்று இன்று தெரிந்து விடும்.

American Bailout has to help Indian Market! I Wish  M……. ……ee as Opposition Leader at American Senate.

7 comments September 26, 2008

25-09-2008

     இன்றைய தினம் Futures & Options முடியும் நாள். நேற்று அமெரிக்க சந்தை பல்வேறு ஆட்டங்கள் ஆடி 29 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. அங்கும் மக்கள் ஒருவித பயத்திலேயே இருக்கின்றார்கள். ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டுதான் சில முதலீட்டாளர்கள் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் ஆனார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
      அவர்களுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் இச்சமயங்களில் ரு.10 வாங்கிய பங்கினை, ஆறு மாதங்கள் கழித்து ரு.30 வரும்போது முதலீடு இரு மடங்காகி விட்டது என்ற மகிழ்ச்சியுடன் நாம் அதை விற்று செய்து profit-booking  விடுவோம். அவர்கள் ஐந்து வருடங்கள் கழித்து, ரு.1800 என்ற விலையில் profit-booking  செய்வார்கள்.  பொறுமை தான் அடிப்படை.

     உலக பொருளாதாரத்தில் ஒரு வித மந்த நிலையும், பாதுகாப்பின்மையும் நிலவுகின்றது. அமெரிக்க அரசு வாக்களித்த Bailout திட்டத்தை செயல்படுத்துமா என்ற சந்தேகமும் சந்தை வட்டாரங்களில் நிலவுகின்றது.  அனைத்து ஊடகங்களும் விற்றுவிட்டு வெளியேறுங்கள் என கூவுகின்றன. எதனை கேட்பது என்ற குழப்பங்கள் உங்களுக்குள் இருக்கலாம்.

     உங்கள் ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், எனக்கும் அந்த குழப்பங்கள் இருக்கின்றன மற்றும் அனைவருக்குமே அந்த  குழப்பங்கள் இருக்கின்றன.

      சந்தை இன்று +10-35 புள்ளிகளுடன் ஆக ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு. நண்பகலுக்கு மேல் சந்தை பொறுத்து சந்தை திசை மாறும் என்றே நினைக்கிறேன். ஐரோப்பிய சந்தைகளின் ஆரம்பம் நம் சந்தையின் நிலையை மாற்றக் கூடும். கச்சா எண்ணெய் விலை தற்போது stabilise ஆகி வருவதாக தெரிகின்றது. பெரிய தலைகள் இன்று மொத்தமாக வாங்கக் கூடும் என்று நம்புகின்றேன். அவ்வாறு நடந்தால் நன்றாக இருக்கும்.

      சந்தை இன்றைய தினம் Positive இருப்பதாக எனக்கு படுகின்றது. ஆனால் இன்றைய தினம் எதையும் உறுதிபட சொல்வதற்கில்லை என்பதால், சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.

Have a Good Day!

Post Market:

      இன்றைய தினம் சந்தை இறங்கினாலும், சமாளித்துக் கொண்டு மேலேறியிருக்கிறது. அமெரிக்க சந்தையில் நிதி சீர்திருத்த நடவடிக்கைகளை செனட்டில் ஒப்புதல் வாங்கி நடத்தபோவதாக அறிவிப்பு வந்தபிறகு, சந்தை ஒரளவு stabilise ஆகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் சந்தையின் மையம் தற்சமயம் பயமாக உள்ளது. அமெரிக்க சந்தை +300 புள்ளிகளுக்கு மேலாக இருக்கிறது. எவ்வாறு முடிகின்றது என்பது தெரிந்தால் தான் நாமும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை பற்றி யோசிக்க முடியும் என்பதால் இன்றைக்கு எல்லோரும்  “டோ ஜோன்ஸ்-ம் கபால ராஜ்யமும்” என்ற Hollywood திரைபடத்தினை பார்ப்போம்.

4 comments September 25, 2008

Next Posts Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930