Archive for September 16th, 2008
16-09-2008
நேற்றைய தினம் நம் சந்தை வேகமாக இறங்கி, நண்பகலுக்கு மேல் 100 புள்ளிகளுக்கு மேல் specutacularly recoverஆனது. அமெரிக்க சந்தையானது சரியபோகின்றது என்பது நமக்கு திங்களன்றே தெரியும். ஆகையால், இன்றைய தினமும் சந்தையில் சரிவுகள் இருந்தபோதிலும், பெருத்த அளவில் இருக்காது என நினைக்கின்றேன்.
ஒரளவு சரிவுடன் ஆரம்பித்த அமெரிக்க சந்தையானது நாளடைவில் பெருத்த சரிவுக்காட்பட்டு, 500 புள்ளிகளுக்கு மேல் இழந்திருக்கிறது. தற்போது ஆரம்பித்திருக்கின்ற ஆசிய சந்தைகள் 4%-க்கு மேல் சரிவுடன் காணப்படுகின்றன.
நமது குழுமங்களில் சில அமெரிக்க சந்தையில் நிறைய முதலீடு செய்திருக்கின்றன. உதாரணத்திற்கு, Development Credit Bank (DCB) etc. அவர்கள் அமெரிக்க சந்தையில் (குறிப்பாக Lehman Brothers நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கின்றார்கள்) அக்குழுமங்கள் பெருத்த அளவில் சரியக் கூடும். இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. உங்கள் கையிருப்பில் உள்ள பங்குகளின் உண்மை விலையை இத்தருணத்தில் கண்டறியலாம். உங்கள் Portfolio புதியதாக உருவாக்கவும், இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
இந்த நேரத்தில் நமக்கு இருக்க வேண்டியது நிதானம். பிரச்சினை அமெரிக்க சந்தையில்தான். மேலும் அமெரிக்கர்கள் எந்த பிரச்சினை வந்தாலும், அதனை சிறிது காலத்திற்கு பின் சரிசெய்து மீண்டு விடுவார்கள். அதனால்தான் உலகின் சூப்பர்பவர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கண்ணெதிரில் நாம் வைத்துள்ள பங்குகளின் மதிப்பு சரியும்போது, என்ன புடலங்காய் நிதானத்தை பற்றி நீ பேசுவது என்று கேட்டால், அதற்கு நீங்களோ அல்லது நானோ எதுவும் செய்ய முடியாது. மேலும், முதலீடு செய்துள்ள தொகையை சந்தை பயத்தில் (Panic Selling) சிக்கி வெகு வேகமாக விற்று விட்டால், நஷ்டம்தான். மேலும், எல்லோரும் அவ்வாறு விற்கையில் உங்கள் பங்குகளை அடிமாட்டு விலையில்தான் வாங்கிக் கொள்வார்கள். வருத்தப்பட்டோ, கோபப்பட்டோ ஒன்றுமே ஆகப்போவதில்லை.
இதுபோன்ற தருணங்கள் சந்தையில் நிறைய வந்தபோதிலும், ஒவ்வொரு தடவையும் சந்தை அதிலிருந்து மீண்டிருக்கிறது என்பதை நினைவு கூருங்கள்.
இன்றைய சந்தை அயல்நாட்டு முதலீட்டாளர்களின் (F.I.I.s) நடவடிக்கைகளை எவ்வாறு இருக்குமென பார்த்தே அதற்கேற்றபடி இருக்கும். சரிவுகள் இருக்க வாய்ப்பு உண்டு. நேற்றைய தினம்போல், சரிவுகளிலிருந்து மீளக்கூடும் என்றெல்லாம் இன்று கருதமுடியாது. சந்தை இன்றைய தினம் -285 முதல் -100 வரை ஆடக்கூடும். சந்தை துவக்கமே -125 புள்ளிகளில் ஆரம்பிக்கக் கூடும். 4% என்பது கிட்டத்தட்ட 160 புள்ளிகள். ஏறக்குறைய சந்தை அந்த நிலையில்தான் இருக்கும். 3800 தொட்டுவிடும் துாரம்தான். பலத்த சரிவிற்கு பின்னர், நாளைய அமெரிக்க சந்தையை பொறுத்துத்தான் உலக சந்தைகளின் (நம்சந்தை உட்பட) பாதை தெரியும்.
அயல்நாட்டு முதலீட்டாளர்கள் Panic Selling செய்ய ஆரம்பித்தால், சந்தை இடைவேளை விட்டு ஆரம்பிக்கக்கூட வாய்ப்பு இருக்கின்றது. இன்றைய தினம் நீண்டகால முதலீட்டுக்கான தினம். தின வணிகத்துக்கானது அல்ல.
History respects the Wise but adores the Brave. Be Brave!
6 comments September 16, 2008