Archive for September 15th, 2008
15-09-2008
சென்ற வாரம் சாதகமான செய்திகள் இருந்தபோதிலும், இரு பெரிய “தலைகள்” அதிக எண்ணிக்கையில் கடைசி நேரத்தில் விற்க ஆரம்பித்ததால், நம் சந்தை தடுமாறியது. கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்திருக்கிறது. இது நல்ல செய்தி. அமெரிக்க டாலரும் மதிப்பு குறைந்திருக்கிறது. இது மேலும் குறைய வாய்ப்பிருக்கிறது.
அப்புறம், ஒரு கெட்ட செய்தி, நம்ம ஐசிஐசிஐ பேங்க் தீடீரென்று திவாலாக போகிறது என்ற செய்தி கேட்டால் நம்முடைய சந்தைகள் எவ்வாறு தடுமாறுமோ, அதே போல் அமெரிக்க பெரிய நிதி நிறுவனங்களில் இரண்டில் ( Merryl Lynch & Lehman Brothers) ஒன்று மற்றொரு நிறுவனத்தால் (AIG) கையகப்படுத்தப்படுகிறது, மற்றொன்று திவால் நோட்டிஸ் கொடுப்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறது. இன்றைய அமெரிக்க சந்தையில் இது மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். இச்செய்தி நேற்றே வந்து விட்டதால், நம்முடைய சந்தையில் இன்று சரிவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று நான் நினைக்கிறேன்.
என்னுடைய கணிப்பு சந்தை ஆரம்ப நிலைகளில் -120 புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு ஏற்படாவிடினும், கடைசி நேரங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
இன்றைய சந்தை இறங்குமுகமாகவே முடிய வாய்ப்பு உண்டு. -125 முதல் -75 வரை முடிய வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.
இன்று மாலை Post market பற்றி எழுத முயற்சி செய்கின்றேன்.
Be Alert and Make Cash!
On market :
இணையத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இன்று 9.30 அளவிலேயே பதிவேற்றம் செய்ய முடிந்தது. -120 புள்ளிகளில் இறங்குமுகமாக ஆரம்பிக்கும் என நினைத்தேன். முதலீட்டாளர்களிடையே பேனிக் கிளம்பி இவ்வளவு அதிகமாக இறங்கி விட்டது. பெரிய நிதி நிறுவனங்கள் எதுவுமே இன்னும் வாங்க ஆரம்பிக்க வில்லை. பார்ப்போம், எப்படி முடிகின்றது என்று!
1 comment September 15, 2008