Archive for September 11th, 2008
11-09-2008
அமெரிக்க நிதி நிறுவனங்களின் முக்கிய நிறுவனமான லெமேன் பிரதர்ஸ் (Lehman Brothers) நேற்றைய சந்தையை துாக்கி நிறுத்தியது. இருப்பினும், 100 புள்ளிகளிலிருந்து 38 புள்ளிகளுக்கு அமெரிக்க சந்தை சரிந்துவிட்டது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்குமுகமாக தான் உள்ளன.
நமது சந்தையும் இறங்குமுகமாக தான் தொடங்கும். நமது சந்தை 4300 என்ற நிலையில் வலுவான சப்போர்ட் இருக்கிறது. இன்றைய சந்தையும் sea-saw சந்தைதான். அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்ததால், தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த பங்குகள் ( Infosys, Wipro, TCS) இன்றைய சந்தையை இறங்கவிடாது. ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களும் ஒரளவு ஏற்றம் கானும் என எதிர்பார்க்கலாம். சிமென்ட் துறையை சார்ந்த பங்குகளுக்கு கடந்த இரு நாட்களாக டிமான்ட் ஏற்பட்டுவருகிறது. அது தற்காலிகமானதா என்பது இன்று தெரிந்துவிடும். சந்தை 4100 என்ற புள்ளிகள் அளவில் செல்லாதவரை ஒன்றும் பெருத்த சரிவுகளை எதிர்பார்க்க முடியாது.
இன்றைய சந்தை -75 முதல் +35 வரை ஆடும் என எதிர்பார்க்கி்ன்றேன். முடிவு அல்லது -35-க்குள் இருக்கலாம்.
Keep your fingers crossed till Inflation data comes!
4 comments September 11, 2008