Archive for September 9th, 2008
09-09-2008
அமெரிக்க சந்தை மிகுந்த உற்சாகத்துடன் 290 புள்ளிகளுடன் முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. Nuclear Deal தொடர்பாக நேற்று நம் சந்தை சற்று அதீத உற்சாகத்தை காட்டி விட்டதோ என தோன்றுகிறது.
இன்றைக்கு ஒபெக் (OPEC-The Organisation of Petroleum Exporting Countries) கூட்டம். அதையொட்டி கச்சா எண்ணெய் விலை இன்று நிர்ணயிக்கக் கூடும். அதற்கேற்றாற்போல் சந்தையும் ஆடும் என நினைக்கிறேன். இன்றைக்கு +35 புள்ளிகள் Gap up ஆக ஆரம்பிக்கக் கூடும். ஆட்டம் +110 முதல் -40 வரை ஆடலாம். Flat அல்லது +25 புள்ளிகளுடன் முடிய வாய்ப்பு உண்டு.
இந்த மாதத்தில் எப்.ஐ.ஐ.கள் (F.I.I.) மிகவும் குறைவாகவே விற்பனை செய்திருக்கின்றார்கள் என செய்தி. கடந்த மாதத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த மாதம் குறைவாகவே விற்பனை செய்திருக்கின்றார்கள் எனவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது.
வேறு கடைகள் இல்லாமல் ஒரு டீக்கடையில் ஒரு டீ பத்து ருபாய்க்கு வாங்கி குடித்துக் கொண்டேயிருந்தால் நமக்கு நல்ல டீ பத்து ருபாய் என பழகிவிடும். தீடிரென்று மற்ற கடைகளில் அதே டீ ஐந்து ருபாய் என்றால் இவ்வளவு நாம் குடித்திருந்த டீ விலை அதிகமாக தோன்றுகிறது இல்லையா! நம் டீ மற்ற கடைகளை பொறுத்த வரை சிறிது விலை அதிகம் என வெளியுர் ஆட்கள் நினைக்கின்றார்கள். நம் சந்தை நிலைமை இன்னும் சீராகவில்லை என நினைக்கின்றேன். இதுபோன்ற உற்சாக செய்திகள் குறுகிய கால இலாபம் மட்டுமே ஏற்படுத்தி கொடுக்கும். 4700-4900 என இலக்கு கொடுத்தாலும், எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஆரம்ப உற்சாகத்திலும், இறுதி பதட்டத்திலும் பங்கேற்காமல் இருக்க மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
Day Trading Market Mood is there, Watch out Oil Sector Stocks!
On Market :
Profit Bookings ஆரம்பித்துள்ளது. இருப்பினும் வாங்குபவர்கள் அதிகம் உள்ளனர். நண்பகலில் ஐரோப்பிய சந்தைகள் துவக்கம் நமக்கு ஏதேனும் வழிகாட்டக் கூடும்.
5 comments September 9, 2008