Archive for September 8th, 2008
08-09-2008
பெரும் இழுபறியில் இருந்து அனுசக்தி ஒப்பந்தம் நிறைவேறி இருக்கிறது. இதன் சாதக பாதகங்களை பற்றி நாம் பின்னர் பார்ப்போம். இந்த ஒப்பந்தம் நிறைவேறியதால், இந்தியாவிற்கு புதிய வணிக கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. புதிய வியாபார ஒப்பந்தங்கள் வருங்காலத்தில் நிறைவேற இருக்கின்றன. குறிப்பாக Power துறையை சார்ந்த குழுமங்கள் இன்றைய தினம் உயர்வு பெற வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக Larsen & Toubro, Tata Power, Reliance Power (?) .
இந்த ஒப்பந்தம் பற்றி இன்னும் சில நாட்களில் என்ன மாதிரி அறிவிப்புகள் அரசிடமிருந்து வரப்போகிறது என்பது தெரியும்வரை, சந்தை தன் முன்னேற்றத்தை மிக குறைந்த அளவு புள்ளிகளுடனே முடியும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போதைய ஆசிய சந்தைகள் உயர்ந்து காணப்படுகின்றன. நமது சந்தையும் +50 புள்ளிகளுக்கு மேல் gap up ஆக தொடங்க வாய்ப்பு உண்டு. முடிவும் +50 முதல் +75 வரை இருக்கலாம் என நினைக்கிறேன்.
Power துறையை சார்ந்த பங்குகளை வாங்க இன்று ஏற்படும் கடுமையான போட்டியின் காரணமாக, அப்பங்குகளும், சந்தையும் வெகு வேகமாக மேலேற வாய்ப்பு உண்டு. சந்தையின் திசை தெளிவாக தெரியும் வரை அந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகியிருப்பதே நல்லது.
Congratulations, India for the successful Nuclear Indo-US deal!
4 comments September 8, 2008