Archive for September 4th, 2008
04-09-2008
நேற்றைய சந்தை +100 புள்ளிகளை கடந்து முடிந்துள்ளது. கச்சா எண்ணெய் $110 என்ற விலையில் ஆகியுள்ளது. மேலும் $100 என்ற விலையருகில் வரக்கூடும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அது நல்ல செய்திதான் என்றபோதிலும், வருவதற்கு இன்னும் ஒரு வார காலம் எடுத்துக் கொள்ளும் என்றே நான் நினைக்கின்றேன். கடந்த இரு தினங்களாக நிப்டி பங்குகளில் நிறைய Long Positions எடுத்துக் கொள்ள பட்டிருக்கிறது. இன்றைய தினம் அதனை விற்று இலாபம் ஈட்ட (Profit Booking) பார்ப்பார்கள். சந்தை ஆரம்பத்திலேயே Selling Pressure இருக்கக் கூடும் என எதிர்பார்க்கிறேன்.
சந்தை இன்று gap down அல்லது flat ஆக ஆரம்பிக்கக்கூடும். ஆசிய சந்தைகள் இறங்கு முகமாக ஆரம்பித்துள்ளன. பொருளாதார மந்தமே இதற்கு காரணம் என சொல்லப்பட்டாலும், உலக அளவில் எந்த பங்கு சந்தையும் கடந்த முன்று மாத காலமாக ஊசலாடுகின்ற நிலையிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க சந்தை ஒரு வருட கால குறைந்த நிலையின் வெகு அருகே இருக்கிறது.
இன்றைய தினம் Oil and Oil Refinery துறையை சார்ந்த பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டக் கூடும். குறிப்பாக Reliance Petroleum, GSPL, MRPL, ONGC போன்ற பங்குகளை நீங்கள் கவனிக்கலாம். சந்தை -65 முதல் +35 வரை ஆடக்கூடும் என எதிர்பார்க்கிறேன். முடிவு -30 அல்லது ஆக முடிய வாய்ப்பு இருக்கிறது.
Be Sharp and Ready!
3 comments September 4, 2008