Archive for September 2nd, 2008
02-09-2008
கஸ்தோவ் (Gustav) புயலின் வேகம் குறைந்திருக்கிறது. இதையொட்டி வேகமாக ஏறிய கச்சா எண்ணெய் விலை அதே வேகத்தில் இறங்கியும் விட்டது. இந்த நல்ல செய்தி நேற்றைய சந்தையில் எதிரொலித்து, சந்தையை recover செய்தது.
இன்றைய தினம் சந்தை +30 முதல் +60 புள்ளிகளுடன் Positive ஆக ஆரம்பிக்கக்கூடும். அதே போல் முடியும் வாய்ப்பிருக்கிறது. நாளைய தினம் விடுமுறை என்பதால், கடைசி அரை மணி நேரத்தில் மெல்ல கீழிறிங்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் சந்தையில் உள்ள பங்குகளின் சந்தைவிலை பற்றி consolidate ஆகும் நேரமிது. நாம் இந்த விலையில் இந்த பங்கினை வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடப்பட்டு இவ்விலை அதிகம் என முடிவு செய்து சில பங்குகள் மேலும் தங்கள் மதிப்பை இழக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எதிர்மறையாக சில பங்குகளில் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
மாலை விரிவாக எழுத முயற்சி செய்கின்றேன்.
Ciao!
6 comments September 2, 2008