Archive for September 1st, 2008

01-09-2008

     சந்தையின் போக்கை பற்றி ஆராய்வதற்கு இதற்கு முன் டெக்னிகல் இன்டிகேட்டர்கள் பக்கம் போக வேண்டியிருந்தது. தற்சமயம் ஒரு புயலின் பின்னால் போக வேண்டியிருக்கிறது. அமெரிக்க அரசு அதி நவீன தொழில்நுட்பத்துடன் புயலை எதிர்கொள்ளவிருக்கிறது என்றாலும், புயல் அடிக்கும் இடம் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் (Oil Refineries) இருக்கும் இடம் என்பதால் பங்கு சந்தையை பாதிக்கும் காரணியாகின்றது.

     பெட்ரோல் அமெரிக்காவின் இரத்தம் என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய இரத்தம் சிறிது நாட்களுக்கு ஒரே இடத்தில் நின்று விட்டால்….. இந்த கஸ்டோவ் (Gustav) புயல் பற்றிய அறிவிப்பு கடந்த ஒரு வாரகாலமாக இருந்தபோதிலும், புயல் நெருங்க, நெருங்க அதன் சக்தியை பங்கு சந்தையிலும் காணலாம்.

    இந்த புயலின் காரணமாக ஆசிய பங்கு சந்தைகளிலும் இன்று சரிவுடன் ஆரம்பித்திருக்கின்றன. நமது சந்தையிலும் புயல் அடிக்கும் என எதிர்பார்க்கலாம். 146 புள்ளிகள் உயர்ந்து முடிந்திருக்கின்ற நிலையில், சிறு முதலீட்டாளர்கள் வெள்ளியன்று Positive  ஆக முடிந்தால், திங்களன்றும் அது தொடரும் என்ற பொதுவான நம்பிக்கையில் Long Positions எடுத்து வைத்திருப்பார்கள். வெள்ளியன்று அமெரிக்க சந்தையின் சரிவும், தற்சமயம் ஆசிய சந்தைகளின் சரிவும், புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பயத்தினையும் சந்தை ஆபரேட்டர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என நினைக்கின்றேன். இந்த சமயங்களில் சிறு முதலீட்டாளர்கள் சந்தை ஆரம்பத்திலேயே தங்கள் கையிருப்பை விற்று விட்டு வெளியேற முயல்வார்கள். சந்தை துவக்கத்திலேயே Selling Pressure அதிகரிக்கக் கூடும்.

     சந்தை இன்று Negative முடியவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. -100 புள்ளிகளுக்கு கீழ் முடியவும் வாய்ப்பு இருக்கிறது. வலுவான சப்போர்ட் 4200 புள்ளிகளில் தான் இருக்கிறது. இந்த வாரம் கச்சா எண்ணெய் விலை வெகுவேகமாக அதிகரிக்கக் கூடும். இதன் விளைவையும் நாம் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

Let’s get ready to face the Storm!

4 comments September 1, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

September 2008
M T W T F S S
« Aug   Oct »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930