Archive for August, 2008
28-08-2008
நேற்றைய தினம் கச்சா எண்ணெய் அமெரிக்காவில் அடிக்கப்போகும் புயலின் (Gustav) விளைவால் விலையேறிவிட்டதால், நம் சந்தையில் நண்பகலுக்கு மேல் புயல் அடித்துவிட்டது. எனினும், சந்தை ஐம்பது புள்ளிகளுக்கு மேல் இறங்காமல் நின்று விட்டது. கடந்த வார புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும்போது, சந்தையில் இன்னும் Short Positions நிறைய Cover செய்தாக வேண்டும் என்ற நிலை நிலவுகிறது. இன்றைய ஐரோப்பிய சந்தைகள் நன்றாக ஆரம்பிக்கும் பட்சத்தில், கச்சா எண்ணெய் மேலும் விலையேறமலிருக்கும் பட்சத்தில் நமது சந்தை இன்றைக்கு ஆக Positive முடிய வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன்.
மேலும் இன்றைய தினம் Futures & Options Closing Day என்பதை மறந்திருக்க மாட்டோம். சந்தையை எவ்வாறு வேண்டுமானாலும் அலைகழிப்பார்கள். சந்தை -70 முதல் +50 வரை ஆடும் என எதிர்பார்க்கலாம். மேலும் பணவீக்க புள்ளி விவரங்கள், ஐஐபி புள்ளி விவரங்கள் வெளியாகும் நாள் இன்று. அந்த புள்ளி விவரங்கள் கூட சந்தையின் போக்கை நிர்ணயிப்பதில் இன்று முக்கிய பங்கு வகிக்கும் என நினைக்கிறேன்.
Be Ready for Anything, everything!
6 comments August 28, 2008
27-08-2008
நாளைய தினம் Futures and Options closing என்பதால் இன்றைய சந்தை See-saw ஆடும். சில முக்கியமான செய்திகள் :
நமது நிதியமைச்சர் இந்திய தொழில் துறை வளர்ச்சி மந்தமடைகிறதே என கவலை வேண்டாம் என கூறியிருக்கிறார். இவ்வாரம் வெளியாகும் ஐஐபி புள்ளிவிவரம் சொல்லிக் கொள்ளும் படி இருக்காது என நான் நினைக்கிறேன். பண வீ்கக புள்ளி விவரமும் அவ்வாறே இருக்கும் எனநினைக்கிறேன்.
அதனால் சந்தை கீழிறிங்கும் நேரத்தில், நம்மிடம் உள்ள அனைத்து பங்குகளையும் விற்றுவிட்டு கையை கட்டிக் கொண்டு அமர வேண்டிய அவசியமில்லை. சந்தை சரியும்போது அனைத்து நிறுவன பங்குகளும் சரியபோவதில்லை. இவ்வாறு சந்தை கீழிறிருங்கும் நேரத்தில் தான் பெரிய நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களை வாங்க (Stake Acquisition) தொடங்கும். அல்லது நிறுவன ஸ்தாபகர்கள் தங்கள் நிறுவன பங்குகளை Buyback முறையில் வாங்க முயற்சிப்பார்கள். சரிவிலும் சில நிறுவனங்களின் பங்கு மேலேறும்.
இன்றைய தினம் சந்தை Positive ஆக ஆரம்பித்து flat அல்லது Positive ஆகவே முடிய வாய்ப்பு உண்டு. இன்றைய தினம் Positive ஆக முடிந்தால், நாளைய தினம் சந்தை இறங்கவே நேரிடும். +60 முதல் -80 வரை ஆடும் என நினைக்கிறேன்.
Stay sharp and ready for Hunt!
3 comments August 27, 2008
26-08-2008
இன்றைய தினம் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் அனைத்தும் சிகப்பாகவே காணப்படுகின்றன. அதனாலேயே நமது சந்தையும் Negative முடியும் என்று சொல்ல இயலாது. Futures & Options Closing முடிய இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நேற்றைய தினம் Profit-booking நடந்ததால், நிப்டி முன்னேறாமல் நின்று விட்டது. இருப்பினும் சென்ற வாரம் நிறைய பங்குகளில் Short Position இருக்கின்றபடியால், சந்தை 4325-என்ற நிலையில் நல்ல சப்போர்ட் இருக்குமென எதிர்பார்க்கலாம். அதையும் தாண்டி இறங்கும் பட்சத்தில், சந்தை 75 புள்ளிகளை இழக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
5 comments August 26, 2008