Archive for August 21st, 2008
21-08-2008
அமெரிக்க சந்தை ஏற்றத்துடன் முடிந்தாலும், தற்போதைய ஆசியசந்தைகள் வலுவிழந்து காணப்படுகின்றன. இதே நிலை நம் சந்தையிலும் எதிரொலிக்கும். நேற்றைய சந்தையில் டெலிகம்யுனிகேஷன் பங்குகள் ஏறி, சந்தையை கீழ்நோக்கி நழுவவிடாமல் பார்த்துக் கொண்டன. உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கிய செய்தியும் சந்தையை வலுவான நிலையில் வைத்துக் கொண்டது.
இன்றைக்கு சந்தை எந்த நிலையில் ஆடும் என்பதை நண்பகல் வரை தீர்மானிக்க இயலாது என்றே கருதுகிறேன். சந்தையின் முடிவு Negative ஆக தான் இருக்கும். சந்தையின் இன்னும் குறைவாகவே இருக்கிறது. அந்நிலை மாறினாலொழிய,சந்தை recover ஆகும் என்ற நம்பிக்கைக்கு இடமில்லை. கச்சா எண்ணெய் மீண்டும் $120 நிலையை தாண்டும் என நிபுணர்கள் சொல்கின்றார்கள். அது நம் சந்தையை பாதிக்கும். இந்த வார பணவீக்க புள்ளி விவரம் சந்தையை பெரிதும் பாதிக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். வரும் வெள்ளி வரை சந்தையின் நிலை பலவீனமாகதான் இருக்கும் என நினைக்கிறேன்.
குறுகிய கால முதலீடுகளை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி போடுவது நல்லது.
4 comments August 21, 2008