Archive for August 20th, 2008
20-08-2008
அமெரிக்க சந்தை நேற்றும் 130 புள்ளிகளை இழந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் சிகப்பாகவே காணப்படுகின்றன. ஆனால் நமது சந்தை வழக்கம் போல் -10 அல்லது -20 புள்ளிகள் இழந்து மட்டுமே ஆரம்பிக்கும். நாளடைவில் கூடுதலாக புள்ளிகளை இழந்த போதிலும், கடைசி 15 நிமிடததில் அவை reocover ஆகிவிடும். ஆகவே இன்றைய சந்தை -45 புள்ளிகளுக்குள் மட்டுமே முடியும்.
இவ்வாறான தோற்றத்தை சந்தை கடந்த சிலநாட்களாக முதலீட்டாளர்களிடையே உருவாக்கி வருகிறது. இதனை நம்பி தின வணிகத்திலோ, ஸ்விங் ட்ரேடிலோ பணத்தை முதலீடு செய்யும்போது, எந்த முன்னெச்சரிக்கையின்றி சந்தையை சரித்து விட கரடிகளால் முடியும். இதுபோன்ற பொறுமையான விளையாட்டை அவர்கள் ஒருவார காலத்திற்கு ஆடமுடிகிறதென்றால், சந்தையை குறைந்தது 250 புள்ளிகளுக்கு மேல் அவர்களால் நாம் எதிர்பார்க்காத ஒரே நாளில் சரித்து விட முடியும். சந்தை இன்றும் Negative முடிவதற்கே வாய்ப்பு இருக்கிறது.
அந்த கருப்பு நாள் இன்று கூட இருக்கலாம்.
3 comments August 20, 2008