Archive for August 19th, 2008
19-08-2008
அமெரிக்க சந்தை 180 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்குமுகமாகவே தொடங்கியுள்ளது. நமது சந்தையும் அவ்வாறே தொடங்கும் என எதிர்பார்க்கலாம். சந்தை முடிவும் Negative தான்.
தற்போதைய ஒரே Positive செய்தி என்னவென்றால், ஸ்ட்ராங்கான டாலர். ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரளவு கரடிகளின் தாக்குதலுக்கு தாக்குபிடிக்கும் என நம்பலாம். பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தன் பதவியை விட்டு விலகியிருப்பது நிச்சயம் இந்தியாவிற்கு கவலை தரக்கூடிய செய்தி. சந்தையையும் அது பாதிக்கக் கூடும். நம் அரசு அதன் கடைசி நாட்களில் இருப்பதால், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் மக்கள் கவனத்தை திசைதிருப்ப ஏதேனும் செய்யலாம்.
இன்றைய தினம் சந்தை -220 முதல் +35 வரை ஆடும் என எதிர்பார்க்கிறேன்.
1 comment August 19, 2008