Archive for August 13th, 2008
13-08-2008
அமெரிக்க சந்தை 140 புள்ளிகளை இழந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்குமுகமாகவே தொடங்கியுள்ளன. கரடிகளுக்கு இன்று அடித்து ஆட நல்ல சந்தர்ப்பம். வெள்ளியன்றே சந்தை புள்ளிகளை இழந்திருந்தால், இன்று consolidate ஆகியிருந்திருக்கும். வெள்ளி, திங்கள் இரண்டு நாட்களிலும் சந்தையை சிலர் துாக்கி கொண்டாடியிருக்கிறார்கள். தோண்டியை போட்டு உடைப்பது இன்றும், நாளையும் உடைத்து விடுவார்கள் என்றே நினைக்கிறேன். இதற்கு மேல் சந்தை வலுவாக மேல்நோக்கி திரும்பும் என நான் நினைக்க வில்லை. வெள்ளியிலிருந்து சொன்ன கருத்துக்கள் தான் மீண்டும் சொல்கின்றேன். என்னுடைய கணிப்பு சந்தையின் சப்போர்ட் 3900-க்கு திரும்பும் என நினைக்கின்றேன்.
இன்றைய தினம் சந்தை கீழ்நோக்கி சரிய தான் வாய்ப்பு இருக்கிறது. அதையும் மீறி +20-30 புள்ளிகளுடன் தொடங்கினாலும், எச்சரிக்கையாக இருந்து தள்ளியே நிற்கவும். தினவணிகம் கூட இன்று ஆபத்தானது என்று நினைக்கிறேன். சந்தை இன்று -180 புள்ளிகளுக்கு மேல் இழக்க வாய்ப்பு உண்டு. கடந்து முன்று நாட்களாக நான் எழுதுவதற்கு நேர்மாறாக நடந்து வருகின்றது. மயக்கமாய் கிடக்கிற ஒருவரை துாக்கி நிறுத்தி, நடத்தி கொண்டு சிலர் போயிருக்கிறாற் போல படுகிறது. இன்றைய தினம் அப்படியே விட்டு விட்டு சென்று விடுவார்கள் என்றே நினைக்கிறேன்.
Stay Alert and Watch!
3 comments August 13, 2008