Archive for July, 2008

28-07-2008

       வெள்ளி மற்றும் சனியன்று நடந்த குண்டு வெடிப்புகள் சந்தையை இன்று பாதிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சந்தை ஆரம்பத்தில் Flat அல்லது Negative ஆக ஆரம்பிக்கவே வாய்ப்பு உண்டு.  இதுவரை காலாண்டு முடிவுகள் வெளியிட்ட வங்கிகள் அனைத்துமே just pass என்ற அளவில் மட்டுமே இருக்கின்றன. இன்றைய காலாண்டு முடிவுகளில் Hindalco மற்றும் Larsen and Toubro குறிப்பிடதக்கவை.

       Larsen & Toubro போனஸ் பங்கு பற்றி இன்று அறிவித்தால் சந்தை மேலேற வாய்ப்பு உள்ளது. தற்போதைய மத்திய அரசு மேல் வைக்கப்படும் முக்கிய குற்றசாட்டான விலை வாசி உயர்வை தன்னுடைய கடைசி மாதங்களில் தீவிரமாய் கட்டுப்படுத்த துவங்கும் என எதிர்பார்ப்பதால், ரிசர்வ் வங்கியிடமிருந்து மேலும் கடுமையான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். சந்தை மேலும் வலுவிழக்க இவை உதவி செய்யும்.

        தற்போதைய சந்தையில் அடிக்கடி சொல்லி வந்தது போல நீண்ட கால மனநிலை மிகவும் முக்கியம்.

      இன்றைய சந்தை +85 முதல் -100 வரை ஆடும் என எதிர்பார்க்கலாம்.  Negative ஆக முடியவே நிறைய வாய்ப்பு இருக்கிறது.

3 comments July 28, 2008

பெரியவரு

     நகரத்திலிருந்து நுாற்றி இருபத்தியெட்டு கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தது அந்த மலை. மிகவும் பழமையான மலை. காற்று மிகவும் சுத்தமாக இருந்தது. மலையை போர்த்தியபடி அடர்ந்த காடு. நகரத்தின் சத்தத்தில் வசித்தவர்கள் இம்மாதிரி ஒரு ஏகாந்தமான இடத்தை கண்டிப்பாக விரும்புவார்கள். இதற்காக  சற்று அதிகமாக செலவழிக்கவும் தயங்க போவதில்லை.

      இந்த இடத்தை பற்றிய என்னுடைய அறிக்கையை நாளை நண்பகலுக்குள் நான் சமர்ப்பிக்க வேண்டும். இடம் நன்றாக தான் இருக்கிறது. மக்கள் நடமாட்டம் குறைவாக …. சுத்தமாக இல்லை. ஏகாந்தமான இடம். அரசிடமிருந்து வெகு எளிதாக பர்மிட் பெற்று விடலாம். பாதுகாக்கப்பட்ட மிருக இனங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. மரங்கள் தான் பெரிது பெரிதாக இருக்கின்றன. பகல் நேரத்தில் காடுகளில் வழக்கமாக இருக்கும் பறவையொலிகளை கூட …

“சார், வண்டி என்ஜீன் சூடாயிடுச்சி. ஒரு முக்கா மணிநேரம் கழிச்சி தான் கிளம்ப முடியும்”
“ஏம்பா, நான் இன்னும் ஒரு மணிநேரத்துல ஆபிசுல இருக்கனும்”
” இறக்கம் தானே சார், போயிடலாம். அப்டியே ஒரு வாக் போய் வாங்க சார். கெளம்பிடலாம்”

     சாலை என்று பெரிதாக ஒன்றுமில்லை. காட்டுபாதை தடம். நடக்க நடக்க உற்சாகமாக இருந்தது. இங்கே ரிசார்ட் கட்டிய பிறகு ஒரு நாள் வந்து குடும்பத்துடன் வந்து தங்க வேண்டும். இந்த இடத்தில் ஒரு செயற்கை அருவி மாதிரி உருவாக்கலாம்.

     வாவ், என்ன இது. செதுக்கிய மாதிரி ஒரு பாதை. பாதையையொட்டி அழகான மலர்கள். ஒவியத்தில் வரைந்ததுபோல் இருக்கிறது. பாதை மெத்தென நடக்க சுகமாக இருக்கிறது. பதினைந்து நிமிஷம் ஆயிருக்கும்.சரி, திரும்பிவிடலாம்.

“நீ தான் பிளஷருல வந்த ஆளா?”

     சிக்குபிடித்த தலையும், அட்டை கருப்பாக வயதான ஆள். பார்க்கவே பயமாக இருந்தது. எந்த ஆயுதமும் இல்லை. வெறும் கோவணம் மட்டுந்தான். வேறு யாராச்சும் இருக்கிறார்களா? இல்லை.

“பெரியவரே, நீங்க யாரு?”

“நா இங்கதான் இருக்கேன். ரொம்ப நாளா.”

      பழங்குடியினர் போலும். பார்த்தால் படிப்பறிவு சுத்தமாக இல்லை என்று தோன்றுகிறது. ஒருமாதிரி இழுத்து இழுத்து பேசுகிறார். ஏதேனும் தொண்டு நிறுவனங்கள் பின்னணியில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

“எவ்ளோ நாளா இங்கே இருக்கீங்க?”
“ரொம்ப நாளா”
“நீங்க மட்டுந்தானா?”
“எங்குடும்பம். அப்றம் பெரியவரு”

     எண்ணிக்கை சுமாராக ஐம்பதுக்கள் தான் இருக்க வேண்டும். பெரியவரு தான் நாட்டாமை போல. பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

“பெரியவர் எங்கே இருக்காரு?”
“வா. கூட்டிட்டு போறேன்.”
” இந்த பாதை ரொம்ப அழகா இருக்கு? யாரும் இதில நடக்கறது இல்ல போல இருக்கே”
“உனக்கு முன்னாடி ரெண்டு பேர் இதில நடந்து போயிருகாங்க.”
“பெரியவரும் இங்கேயே தான் ரொம்ப நாளா இருக்காரா?”
“ஆமா. வடக்க பெரிய சண்ட நடந்து அடிபட்டு வந்தவரு இங்கேயே தங்கிட்டாரு.”

கடவுளே, வடக்கே வெறும் கடல்தானே இருக்கு. இலங்கையிலிருந்து வந்திருப்பாரோ. விடுதலை புலி மாதிரி.

“ஏன் பெரியவரே, நீங்களே ரொம்ப வயசா தெரியறிங்க. உங்க பெரியவரு உங்களை விட வயசானவரா?”
“வயசுலயும் பெரியவரு.”

“எப்ப இங்கே வந்தாரு?”
“ரொம்ப நாளைக்கு முன்னாடி.”

“”எந்த ஊர்ல இருந்து வந்தாரு?”
“அதான் கடல் கடந்து வந்தாருன்னு சொன்னேன்ல.”
“வந்து ஒரு இருபது வருஷத்துக்கு மேல இருக்குமா?”
“அதுக்கும் மேல இருக்கும்”

 

 இப்பதான் நிம்மதியா இருக்கு. இவரவிட வயசானவராயிருந்தால் ஒரு எழுபது வயசாவது இருக்க வேண்டும். எளிதில் சமாளித்து விடலாம்.
” இன்னும் எவ்ளோ துாரம் பெரியவரே?”
“கொஞ்ச துாரம் தான்.”
“ஏன் பெரியவரே, இங்கே நரி, குரங்கெல்லாம் நிறைய இருக்குமா?”
“அங்க இங்க நரி இருக்கும். குரங்கு இருக்காது.”
” இவ்ளோ பெரிய மரம்லாம் இருக்கும் போது குரங்கு இல்லைன்னா எப்படி?”
“பெரியவருக்கு குரங்குன்னா பிடிக்காது.”

 

 

.”

9 comments July 25, 2008

25-07-2008

     அமெரிக்க சந்தை 283 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. அது தற்போது ஆசிய சந்தைகளில் எதிரொலிக்கிறது. மகிழ்ச்சிக்குறிய செய்தி : பண வீக்கம் சிறிது  குறைந்திருக்கிறது. ஒரு வேளை சந்தை சரிவதை அது தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும் வைக்கலாம்.

      இன்று சந்தை துவக்கத்திலேயே சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் சரியும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு துவங்காமல் Positive ஆக துவங்கினால், நண்பகலுக்குள் சரிய வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய சந்தைகள் இன்று Negative நிலையிலேயே துவங்கும் என கருதுகிறேன்.

    சந்தை தற்போது வடிவேலு மாதிரி “ஆளு ஸ்ட்ராங்கு, ஆனா பேஸ்மெண்ட் வீக்” என்று இருக்கிறது. 3750-களில் பங்குகள் வாங்கியிருந்தால் இலாபம் ஈட்டுவதை பற்றி சிந்திக்கலாம். அந்த வாய்ப்பை நழுவ விட்டவர்கள் மீண்டும் வரக்கூடிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். சந்தையை தற்போது குறுகிய கால நோக்கில் 3750, 3600 …. என்று பார்க்காமல் நீண்ட கால நோக்கில் பார்க்க பழகிக் கொள்ளுங்கள்.

    சந்தை இன்று -180 முதல் +50 வரை ஆடும் என நினைக்கிறேன்.

Stay Sharp and Happy Weekend!

1 comment July 25, 2008

Next Posts Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031