நீலக் கண்கள்
July 18, 2008
“மே ஐ கமின்ஸார்”
“வா,வா. என்னடா?”
“சார், முத்து கிளாஸ்க்கு வராம ஆத்துல போய் குளிச்சிட்டு வரான், சார்”
“சாரை கூப்டு இங்க. என்ன துரை, கிளாஸ்க்கு வராம ஆத்துல போய் குளியலா? டிசி கொடுத்துருல்லாமா, தெனம் ஆத்துலேயே குளிக்கலாம்.”
“சார், இரண்டு நாளா எப்பப்பாத்தாலும் ஆத்திலயே தான் கெடக்கான்.”
“வாயை தொறந்து பேசுடா, கேக்குரன்ல….சத்தமா பேசு, காலையிலே தின்னுட்டு தானே வந்தே?”
“சார்…………உடம்பெல்லாம் எரியுது.”
“ஓ, அப்டியா, நாளையில இருந்து ஸ்கூல்ல ஏசி போட்ருலாம். நீட்ரா, கைய”
“சார், அவன் சட்டய கழட்டி பாருங்களேன்.”
“சட்டய கழட்டுரா”
“என்னடா, முதுகெல்லாம் ஒரே செதில் செதில்ளா பெந்து இருக்கு. சொறியா? சட்டய போடு”
“சார், அவன் கண்ணை வெளிச்சத்துல பாருங்களேன். கோலி குண்டு மாரி நீலமா இருக்கு”.
“ஆமாடா, எனக்கு வேறு வேல இல்லை பாரு. போடா, போய் வெளியில முட்டி போடு. நாளக்கு உன் அப்பனை கூட்டிட்டு வரனும்”
…………………..
“யாரும்மா நீ?”
“அய்யா, முத்துவோட அம்மாங்க.”
“உம்புள்ள என்ன பன்றான் தெரியுமா? உடம்பெல்லாம் ஒரே சொறி அவனுக்கு.”
“நல்லாதாங்க இருந்தான். அவுங்க அப்பாவோட தேன் வாங்க மலைக்கு போனான். அவரு குடிச்சுட்டு அங்கயே வுழுந்துட்டார். இராத்திரி புள்ள மல காட்டு வழியா தனியா வந்துச்சு. அன்ன காலயிலிருந்து மந்திரிச்சுவுட்ட மாதிரி இருக்கான். அவுங்க அப்பனும் சரியில்ல. நான் ஒன்டி ஆள், என்ன பண்னுவேன், வயகாட்டு வேலை பண்ணி தான் சோறு பொங்குறோம். அவன ஸ்கூலவுட்டு அனுப்பிறாதீ்ங்க. இனிமேல இப்படியல்லாம் செய்ய மாட்டான்.”
“சரி, காலங்காத்தல வந்து அழுவாதம்மா. அவன் உடம்ப பாத்தியா?”
“அதுவும் இரண்டு நாளாதாங்க இருக்கு. வயல் வேலை முடிச்சுட்டு வுட்டுக்கு வரதுக்கு இராத்திரி ஆயிதுடு. நாங்…”
“சரி,சரி, வீட்டுக்கு போறப்போ மாரியம்மன் கோவில்ல போய் துன்னுாறு வாங்கி மந்திரிச்சுட்டு போ. எல்லாம் சரியாயிடும்.”
Entry Filed under: கதை. .
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Cyril Alex | July 18, 2008 at 9:31 pm
Spell check this line அன்ன காலயிலிருந்து மந்திரிவுட்ட
2.
sharehunter | July 18, 2008 at 9:36 pm
சரி செய்யப்பட்டது, நன்றி.
3.
SHANKAR VISVALINGAM | February 22, 2009 at 5:40 pm
சிறுவன், விகாரமடைகிறான் என கொள்ளலாமா பங்கு வேட்டையரே.[ மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள்]