Archive for July 15th, 2008

குதிரை வியாபாரம்

     இன்றைய நாளிதழ்களில் ஆட்சி நிலைக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ருபாய் இருபத்தைந்து கோடி விலைபேசப்பட்டதாக கண்டு அதிர்ச்சியடைந்தேன். அந்த செய்தி முற்றிலும் தவறானதாக தான் இருக்கவேண்டும். 300 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் ஸ்திரமான ஆட்சி அமைக்க முடியும். நாளிதழ்களின் கணக்குப்படி பார்த்தால், 300 * 25 = 7500 கோடி ருபாய் மட்டுமே இந்தியாவின் ஆட்சியின் மதிப்பு என்று வருகிறது.

     ரிலையன்ஸ் குருப்களின் ஏதேனும் ஒரு குழுமத்தின் சந்தை மதிப்பே ஏறக்குறைய இந்த தொகை வரும். இச்செய்திகளின் அடிப்படையில்  இரு வகையான முடிவுகள் எடுக்கலாம். ஒன்று, நாளிதழ்களில் வெளிவந்த செய்தி தவறானதாக இருக்கவேண்டும். ஏனெனில் மதிப்பு சந்தை நிலவரப்படி இதை விட அதிகமாக இருக்க வேண்டும். இரண்டாவது, குறுகிய கால இலாபம் பார்க்க இதைவிட ஒரு அற்புதமான முதலீடு இருக்க முடியாது. குறுகிய, நடுத்தர, நீண்டகால முதலீட்டிற்கு இம்மாதிரி முதலீடு செய்யலாம்.

     நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை எவ்வாறு அலசி உண்மையினை கண்டுபிடிப்பது என்று யோசித்தபோது தோன்றியதை நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறேன். நீங்களும் இதை நகைச்சுவை உணர்வுடன் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

4 comments July 15, 2008

15-07-2008

     அமெரிக்க சந்தை முடிந்தாலும், சமாளித்திருக்கிறது. தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் Negative  ஆக தொடங்கியுள்ளன. மத்திய அரசு நிலைக்க “குதிரை பேரம்” தொடங்கியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.. இது தவறான முறை என்றாலும், எதிர்கட்சிகள் இத்தகைய பேரத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடதக்கது. மத்திய அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து நிலைத்திருக்கும் என்றே நம்ப தற்சமயம் நிலை இருக்கிறது. இன்று காலை எந்த Negative செய்திகளும் இல்லை என்பது Positive செய்தியாகும்.

      கச்சா எண்ணெய் விலையும் இறங்கியிருக்கிறது என்பது சந்தைக்கு தெம்பு அளிக்கக் கூடிய செய்தி. இன்றைய தினம் ஆரம்பத்தில் இறக்கமாக ஆரம்பித்தாலும், நாளடைவில் மீளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.

     சந்தை இன்று -75 முதல் +100 வரை ஆடும் என நினைக்கிறேன். முடிவு Positive ஆக தான் இருக்கும் என நினைக்கிறேன்.

 

Post Market :

     Negative ஆக தொடங்கிய சந்தை recover ஆகவேயில்லை. 200 புள்ளிகளை இழந்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும்படி எந்தவித காரணங்களிமின்றி புள்ளிகளை இழந்திருப்பதால், நாளையே மீண்டும் வேகமாக எழ வாய்ப்பும் இருக்கிறது.

      இந்த சரிவை பயன்படுத்தி ஸ்விங் ட்ரேட் நாளை கண்டிப்பாக செய்வார்கள் என நம்புகிறேன். பார்க்கலாம்.

2 comments July 15, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031