Archive for July 14th, 2008
14-07-2008
அமெரிக்கா இரு கடன் கொடுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு (Fannie Mae & Freddie Mae) உதவி அளித்திருக்கிறது. ஒரு அரசாங்கம் தனியார் நிதி நிறுவனங்களுக்கு இவ்வாறு நிதி உதவி அளிப்பது ஆச்சரியம் தான். தற்போது துவங்கியுள்ள ஆசிய சந்தைகள் உற்சாகமாக தொடங்கியுள்ளன. இதே உற்சாகம் நமக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான். ரிலையன்ஸ் குருப் குழுமங்கள் அனைத்துமே கரடிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. கரடிகளும், காளைகளும் இந்த பங்குகளை Operate செய்தே சந்தையை ஆட்டுவிக்கின்றனர்.
மத்திய அரசாங்கத்தின் மீது எழுப்பப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தையொட்டி தினமும் செய்திகள் வந்தவண்ணம் இருப்பதால், சந்தை 22-ம் தேதி வரை ஊசலாடும் வாய்ப்பு உள்ளது. அதிக/குறைந்தபட்சமாக 4375-3700 வரை ஆட வாய்ப்பு உள்ளது.
இன்றைய சந்தை எவ்வாறு வேண்டுமானாலும் தொடங்கலாம். முடிவு Negative தான் இருக்குமென நினைக்கின்றேன். சந்தை -100 முதல் +50 வரை ஆடக்கூடும் என எதிர்பார்க்கலாம். நாளடைவில் வரும் செய்திகளை பொறுத்தே சந்தை தனது ஆட்டத்தை நிலைநிறுத்திக் கொள்ளும்.
இன்றைய தினம் ரிலைன்ஸ் குருப் பங்குகளை கவனியுங்கள்.
2 comments July 14, 2008