காக்கா-நரி கதை
July 12, 2008 at 12:55 pm 13 comments
“அப்பா…. அப்பா”
“செல்லம், அப்பா வேலையா இருக்கேன்டா”
“அப்பா, நான் ஒன்னு சொல்றேன் கேளேன்”
“சரி, சொல்லுடா”
“நம்ம மரத்தில ஒரு காக்கா வதையோட உக்காந்திச்சாம் … ம் சொல்லு”
“ம்”
“அப்ப நாய் வந்து காக்கா, காக்கா அளகா இருக்கியே, ஒரு பாத்து பாது சொல்லிச்சி”
“ம்”
“காக்கா வதைய கால்ல வைச்சிகிட்டு நீ பொய் சொல்றேன்னு சொல்லிச்சி. நாய் ஒடிபோச்சி”
“ம்”
“அவ்ளோதான்”
“செல்லம், எவ்ளோ அழகா சொல்றே. அது நாய் இல்ல, தங்கம், நரி டா”
“அய்யோ நாய்தாம்ப்பா”
“சரி, உனக்கு இந்த கதை யார் சொன்னா?”
“யாரும் சொல்லலியே. நான் கேத்தேன்ப்பா”
Entry filed under: கதை. Tags: .
1.
வெண்பூ | July 12, 2008 at 1:43 pm
மழலை மொழியை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு முடிவு புரியவில்லை மற்றும் இது ஏன் அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
2.
batcha | July 13, 2008 at 8:24 am
இதன் மூலம் பங்குசந்தையை பற்றி எதும் சொல்ல வருகிறீர்களா ?
3.
sharehunter | July 13, 2008 at 8:31 am
இல்லை, பாட்சா, இது கதை மட்டுமே.
4.
batcha | July 13, 2008 at 12:45 pm
மிக்க நன்றி தாங்கள் பதில் அளித்ததற்கு
5.
senthil kumar.R | July 14, 2008 at 6:08 pm
sir,
onnumey puriala!
6.
சேவியர் | July 28, 2008 at 2:43 pm
//காக்கா வதைய //
பசுவதை கேள்விப்பட்டிருக்கேன். இந்த காக்கா வதை… புது வகை வதையாய் இருக்கே
7.
மாதங்கி | August 22, 2008 at 11:13 am
யாரும் சொல்லலையே நான் கேத்தேன்பா என்று குழந்தை சொன்னது நல்லாயிருக்கு
8.
Karthikeyan G | December 10, 2008 at 6:34 pm
.
பாப்பா தான் முன்ஜென்மத்துல நாயா வந்து வடையை கேட்டதா???
9.
SHANKAR VISVALINGAM | February 22, 2009 at 5:41 pm
குழந்தைக்கு மிருகங்களின் மொழி புரிகிறது என நான் கூறினால் நீங்கள் கோபிக்க கூடாது. சுஜாதா இதனை ரசித்திருப்பார்.
10.
M.selvarajan | June 10, 2011 at 11:40 pm
super sir.aana ethu palaiya kathaiya eruke
11.
Mani | June 10, 2011 at 11:42 pm
Anna super
12.
Prasanth | June 10, 2011 at 11:42 pm
super.spelling mistake
13.
நோணான்டி | June 10, 2011 at 11:43 pm
சூப்பர்