Archive for July 12th, 2008
காக்கா-நரி கதை
“அப்பா…. அப்பா”
“செல்லம், அப்பா வேலையா இருக்கேன்டா”
“அப்பா, நான் ஒன்னு சொல்றேன் கேளேன்”
“சரி, சொல்லுடா”
“நம்ம மரத்தில ஒரு காக்கா வதையோட உக்காந்திச்சாம் … ம் சொல்லு”
“ம்”
“அப்ப நாய் வந்து காக்கா, காக்கா அளகா இருக்கியே, ஒரு பாத்து பாது சொல்லிச்சி”
“ம்”
“காக்கா வதைய கால்ல வைச்சிகிட்டு நீ பொய் சொல்றேன்னு சொல்லிச்சி. நாய் ஒடிபோச்சி”
“ம்”
“அவ்ளோதான்”
“செல்லம், எவ்ளோ அழகா சொல்றே. அது நாய் இல்ல, தங்கம், நரி டா”
“அய்யோ நாய்தாம்ப்பா”
“சரி, உனக்கு இந்த கதை யார் சொன்னா?”
“யாரும் சொல்லலியே. நான் கேத்தேன்ப்பா”
9 comments July 12, 2008