Archive for July 10th, 2008
10-07-2008
அமெரிக்க சந்தை ஒரு வருட குறைவிற்கு மிக அருகில் இருக்கிறது. ஆசிய சந்தைகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. நேற்று ரிலையன்ஸ் குழும பங்குகளை வைத்து சந்தை மிக வேகமாக மேலே ஏறி 150 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. நேற்று ஏறிய புள்ளிகள் இன்றைக்கு இறங்கி விடும் என்றே நினைக்கின்றேன். இன்றைய தினம் ஆரம்பத்திலேயே சந்தை புள்ளிகளை இழந்து தத்தளிக்கக் கூடும். நாளின் மத்தியில் வரும் செய்திகளை பொருட்டும் சந்தை வேகமாக react செய்யும்.
முன்பு சொன்னதை போல் 3700 புள்ளிகளை தொடும் வாய்ப்பு இருப்பதாகவே இன்னும் நான் நம்புகின்றேன். முதலீடுகளை கவனமுடன் செய்யவும். சந்தை ஆரம்பத்திலேயே இறங்கக் கூடும் என்பதால் தின வணிகம் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். நிப்டி -225 முதல் +50 வரை ஆடும் என்று நினைக்கின்றேன்.
Post Market :
சந்தை எந்த முன்னேற்றமின்றி முடிவடைந்துள்ளது. மத்திய அரசுக்கு வந்த ஸ்திரமின்மை -தன்மை தற்சமயம் நீங்கியிருப்பதால், சந்தை தனது குறைந்த பட்ச இலக்கான 4300-ஐ நோக்கி பயணப்படாமல் 4100 எல்லைக்குள்ளேயே இருக்கிறது. இந்த விளிம்புநிலை சந்தை எந்த பக்கமும் சாயக்கூடும். கடந்தகால புள்ளிவிவரங்கள் அனைத்தும் கீழ்நோக்கி சாய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இருக்கின்றன. மிகக் குறுகிய கால வணிகம் தான் தற்போது சந்தையில் நடைபெறுகிறது. முதலீடு செய்ய சிறிது காலம் காத்திருந்தால் நல்லது என்றே தோன்றுகிறது.
2 comments July 10, 2008