Archive for July 4th, 2008
04-07-2008
அமெரிக்க சந்தை சிறிதளவு ஏற்றம் கண்டிருக்கிறது என்றாலும், தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது பற்றி கூட்டணிக் கட்சிகள் பல நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவோ அனுசக்தி ஒப்பந்தத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்ற வற்புறுத்திக் கொண்டிருக்கின்றது. கச்சா எண்ணெய், விலைவாசி ஸ் … அப்பா இப்பயே கண்ணை கட்டுதே.
இன்றைய சந்தை -125 முதல் + 75 வரை ஆடும் என எதிர்பார்க்கின்றேன். முடிவு எதிர்மறை (Negative or flat) என்றுதான் நினைக்கிறேன்.
Happy Weekend!
Post Market :
+90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஒரு சிறிய அளவு நம்பிக்கையை விதைக்கும் பொருட்டு இந்த உயர்வு இருந்தபோதிலும், குறுகிய கால முதலீட்டாளர்களை கவர்ந்திருக்கும் பொருட்டே இந்த ஏற்றம் இருக்கின்றது என நான் நினைக்கின்றேன்.
இன்று அமெரிக்க சுதந்திர தினம். அவர்களுக்கு நம் நாடு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
வரும் வாரங்களில் கவனம் தேவை!
2 comments July 4, 2008