Archive for July 3rd, 2008

மே 15, 2015

பெங்களுரு.மே மாதம் 15-ம் நாள், 2015.

ரத்னா டவர்ஸ் ஐந்து நட்சத்திர ஒட்டலில் கன்னா முகம் வெளிறி போயிருந்தான். அவனுடைய மேலதிகாரி  தொந்தி அதிர கத்திக் கொண்டிருந்தார்.

” அவனுக்கு தான் அறிவில்ல. உனக்கு எங்கே போச்சு புத்தி? ஒரு ஏற்பாடு சரியா பண்ண மாட்டிங்களா? வெட்டி சம்பளம் தான்யா வாங்கறீங்க. ஷர்மா எங்கே? இருக்கானா வீட்டுக்கு போய்ட்டனா?”

“சார், ஷர்மா  எப்படியாவது வாங்கிட்டு வந்துர்றான்னு சொல்லிருக்கான்.”

“கிழிச்சான். உங்களை கட்டிக்கிட்டு நான் மாரடிக்கிறன். எப்படிய்யா அரேன்ச் செய்வான்?”

“அவனுக்கு தெரிந்த மதறாசி ஒருத்தன் ஜலகல்லி-ல இருக்கானாம். அவங்க வீட்டுல சொல்லி …”

“ஒழுங்கா வந்து சேருல்ல அவனுக்கு மெமோ தான் சொல்லு. சமோசா எல்லாம் ரெடி ஆயிச்சா?”

” இன்னும் ஒரு மணி நேரத்தில வந்திரும் சார்.”

“யோவ், மினிஸ்ட்டரே இன்னும் அரை மணி நேரத்தில வந்துருவார். சென்னையிலேயிருந்து கிளம்பி வந்துட்டே இருக்காராம். பேனர் என்ன ஆச்சி? அது நாளைக்கு வந்துருமா?”

” இல்லை சார். இதோ இங்கே வைச்சுருக்கேன்.”

“சரியான இடம்யா. அப்டியே சுருட்டி வைச்சுரு. யாரும் பார்க்கக் கூடாது”

“சார்….”

“பேனர் எதுக்கய்யா? பிரி, பார்ப்போம். யோவ், என்னய்யா வார்மிங்க்கு  பதிலா வார்னிங் போட்ருக்கு”

“சார், அது எம் தான் சார்”

“மினிஸ்டர் கேட்டா சொல்றியா?”

“…”

“மினிஸ்டர் பேர விட இந்தாளு பேரு பெருசா இருக்கு. இதுவும் ஷர்மா வேலைதானா?”

” இல்லை.. சார்… வந்து ….”

 ”சார், மினிஸ்டர் வர லேட்டாகும்.”

“ஏன்யா ..”

“சென்னையிலே பனிப்புயலாம். ப்ளைட்டெல்லாம் லேட்டாம்.”

“கடவுளே, இப்பதான்யா உயிரே வந்திச்சி”.

10 comments July 3, 2008

03-07-2008

     அமெரிக்க சந்தை 160 புள்ளிகளை இழந்து பொருளாதார மந்த நிலைக்கு (Recession)  சென்றுள்ளது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் சிகப்பாக உள்ளன. கச்சா எண்ணெய் 145 டாலராக உயர்வு. இடது சாரிகள் மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளனர்.  என் வீட்டுக்கு வரும் வணிக செய்திதாட்கள் இன்று வழக்கமான நேரத்திற்கு முன்னதாக வந்துவிட்டன என்பது தான் இன்று காலையில் எனக்கு கிடைத்த  ஒரே பாசிட்டிவ் செய்தி.
     நேற்றைய ஏற்றம் இன்றைக்கு நீடிக்குமா என்பது சந்தேகம். ஆனால் நம் சந்தை சில நிப்டி மற்றும் சென்செக்ஸ் பங்குகளை Oversold செய்துள்ள நிலையில் நேற்று short-covering  செய்ய துவங்கியதால் ஏற்றம் கண்டது. இன்றைய சந்தையில் Selling pressure அதிகமாக இருக்கும் நிலையில், ஏற்ற நிலை நீடிக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கின்றேன்.

     இன்றைய சந்தையின் பாதையை சரியாக கணிக்க இயலாது. சந்தை -175 முதல் +70 வரை ஆடலாம் என்று நினைக்கின்றேன். தின வணிகர்கள் ஸ்டாப் லாஸ்-ஐ தீவிரமாக பின்பற்றுவது நன்று. தின வணிகம் செய்யாமலிருப்பது அதைவிட நன்று.

3 comments July 3, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031