Archive for July 2nd, 2008
02-07-2008
நேற்றைய தினம் சந்தை Positive ஆக முடியும், சில புதிய பள்ளங்களை தொட்ட பிறகு மீண்டும் recover ஆகும் என்றும் எதிர்பார்த்தேன். சந்தையின் விற்பனை (Volume) மிகவும் குறைந்து விட்டது. சிறு முதலீட்டாளர்கள் தின வணிகத்துடன் நிறுத்தி கொள்கின்றார்கள். பங்குகளை டெலிவரி (Delivery based trade) வாங்குவது மிகவும் குறைந்து விட்டது. நேற்றைய அமெரிக்க சந்தை சில புதிய பள்ளங்களை தொட்டு மீண்டிருக்கிறது. தற்போது ஆரம்பித்திருக்கும் ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் ஆரம்பித்திருக்கின்றன. நமது சந்தையும் அப்படியே gap down ஆரம்பித்து, புதிய இறக்கங்களை தொட வாய்ப்பு இருக்கிறது. நாளடைவில் சந்தை பள்ளங்களை தொட்டு மீள வாய்ப்பிருப்பதாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால், இன்றைய தினம் மியூட்சுவல் பண்ட் நிறுவனங்கள் பல நிறைய Block Deals செய்யும் என எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு நடந்தால் சந்தை இன்று மீண்டும் 4000 ஐ கடக்க வாய்ப்பு உண்டு. மத்திய அரசிடமிருந்து முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வரலாம் எனவும் எதிர்பார்க்கலாம். ஐரோப்பிய சந்தைகள் இன்றைய தினம் Positive ஆக ஆரம்பிக்கும் என நம்புகின்றேன். எவ்வளவோ நல்ல செய்திகள் நடக்க வேண்டும் என ஆசைப்படுகின்றோம். சந்தையோ Negative செய்திகளை ஈர்த்து திசையை மாற்றி பயணம் செய்கின்றது.
இன்றைய சந்தை +80 முதல் – 60 புள்ளிகளை வரை ஆடும் என நினைக்கிறேன். தற்போதைய சந்தை எந்த கணக்கீட்டுக்கும் கட்டுப்படுவதில்லை என்றாலும் புதிய செய்திகள் தற்போது வரை ஏதும் இல்லாததால் இவ்வாறு கணிக்கிறேன்.
3 comments July 2, 2008