Archive for July, 2008

31-07-2008

     நேற்றும் அமெரிக்க சந்தை 180 புள்ளிகளுக்கு மேலாக உயர்ந்து முடிந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை stabilise ஆகிக் கொண்டிருக்கிறது. நமது சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் இன்றும் உயர வாய்ப்பு இருக்கிறது.

     பெரிய குழுமங்கள் வெளியிடும் சூன் 2008 காலாண்டு அறிக்கைகள் எல்லாம் சுமாராகவே இருக்கின்றன. குறிப்பாக, வங்கிகள். வங்கி துறையில் கரடிகள் தாக்குதலை வெகு விரைவிலேயே எதிர்பார்க்கலாம். அமெரிக்க சந்தையின் எழுச்சியால் தற்சமயம் ஒத்திப் போடப்பட்டிருப்பதாகவே நினைக்கிறேன்.

      இன்றைய தினம் நம் சந்தை Positive ஆகவே துவங்கும். +150 முதல் -50 புள்ளிகளுக்குள் ஆடும் என எதிர்பார்ககலாம். முடிவு 100 புள்ளிகளுக்கு மேல் முடிய வாய்ப்பு உண்டு.

      இன்றைய தினம் ஏகப்பட்ட குழுமங்கள் காலாண்டு அறிக்கைகளை வெளியிடுகின்றன. அவற்றில் குறிப்பிடதக்கவை என்றால் Adlabs Flim, Tata Steel, Reliance Communications, National Aluminium, Ispat Ind, MTNL .

     Wish u all success in August 2008!

July 31, 2008 at 5:43 am 2 comments

பணவீக்கம் IV

     இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தின. விவசாயத்தில் நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி விளைச்சலை பெருக்கின. நமது நாடோ “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” என்று பழைய முறைகளை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டது. நாட்டின் மொத்த உற்பத்தியில் தொழிற்சாலை உற்பத்தி பெரிய அளவில் இடம் பெறவில்லை.

     வானம் பொய்த்து, நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டபிறகு தான் இதன் தீவிரத்தை உணர்ந்தோம். உணவு தானியங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போதுதான், அந்நிய செலாவணியின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். விவசாய அறிவியல் மேதை திரு எம். எஸ் சுவாமிநாதன் மற்றும் திரு சுப்ரமணியன் போன்றோர்களின் மேதைமையால் நம்நாடு கடுமையான உணவு பற்றாக்குறையிலிருந்து தப்பித்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவும் எய்தியது. அந்த காலகட்டங்களில்கூட ஒரு டாலருக்கு இந்திய மதிப்பு 8 ருபாய் மட்டுமே.
1980-களில் நம்நாடு ஒரு பெரும் புதையலை கண்டுக் கொண்டது. நம்முடைய தர்க்க அறிவு தான் அது. இந்த தர்க்க அறிவை வைத்துக்கொண்டு வெட்டிப்பேச்சு மட்டுமின்றி, கணினி மென்பொருளும் எழுதலாம் என்று தெரிந்துக் கொண்டபிறகு நாட்டின் பொருளாதாரம் வேறுதிசையில் திரும்பியது. குறிப்பாக நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கணினி மென்பொருள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்தது. வருடத்திற்கு வருடம் அது பன்மடங்காக பெருக ஆரம்பித்தன. 1990-ல்  ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ருபாயின் மதிப்பு 17 ருபாய்.  இரண்டு மடங்கு அதிகரித்தது.

      வகுப்பில் நன்றாக படிக்கும் ஒரு பையன் எப்படி ஆசிரியருக்கு செல்லமாக மாறுகின்றானோ அவ்வாறே தகவல் தொழில்நுட்ப குழுமங்கள் (Information Technology Companies) அரசின் செல்லப்பிள்ளைகளாக மாறின. நாட்டின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் அக்குழுமங்கள் பெருமளவில் பாதிக்காமல் இயற்றப்பட்டன.

     நாம் இரண்டாவது முறையாக அனுகுண்டு வெடித்தபோது, உலக நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்ட குறுகிய காலத்தில் அந்நிய செலாவணி நெருக்கடியிலிருந்து காத்தது இந்நிறுவனங்கள் கடந்த காலங்களில் ஈட்டிக் கொடுத்த அந்நிய செலாவணிதான்.
ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத்தை செல்லமாக பாவித்து வளர்த்ததில் வேறு சில விளைவுகளும் ஏற்பட்டன. பணப்புழக்கம் அளவுக்கு அதிகமாக அதிகரித்தது. உதாரணத்திற்கு, ஐதாரபாத் மற்றும் சென்னையில் கணினி குழுமங்கள் ஆரம்பிக்கப்பட்டபின் அந்நகரங்களில் விலைவாசி எவ்வாறு அதிகரித்தது  என்பதை 1990-99-களில் அங்கே வசித்தவர்களை கேட்டால் தெரியும். நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்தற்கு தகவல் தொழில் நுட்பக் குழுமங்களையும் ஒரு காரணமாக சொல்லலாம்.

     மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் Outsourcing குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தால் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கே பெரிய இடர் வந்த மாதிரி ஊடகங்களில் செய்தி வெளியாக ஆரம்பித்து, சந்தையும் பலமாக பாதிக்கப்பட்டது.  பல துறைகள் இருக்கும்போது, அரசாங்கம் இத்துறையையே முதன்மையாக கொண்டு   பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. 2000-களில் டாலரின் மதிப்பு நாற்பதைந்து ருபாய்கள்.

     தற்போது நிலைமை சிறிது மாற ஆரம்பித்திருக்கிறது. மற்ற துறைகளையும் கரிசனத்துடன் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் விளைவாக டாலரின் மதிப்பு வரும் ஆண்டுகளில் குறையும் என எதிர்பார்க்கலாம். டாலரின் மதிப்பு குறைவதனால் ஏற்றுமதி நிறுவனங்கள்  நஷ்டத்தை சந்திக்கின்றன என்றாலும் வெளிநாடுகளிலிருந்து இயந்திர வகைகளை குறைந்த விலையில் இறக்குமதி செய்ய முடியும். அதனால் நம் நாட்டு தொழிற்துறை வளர்ச்சியடைய மறைமுகமாக உதவலாம் என்பதையும் மறந்து விடக் கூடாது. உதாரணத்திற்கு, டாலரின் விலை பத்து ருபாய் குறைந்தால், ஒரு ஐ-போட்(i-Pod)-டின் விலை கிட்டத்தட்ட ருபாய் ஆயிரத்து எழுநுாற்று ஐம்பது அளவில் குறைய வாய்ப்புள்ளது.

     பணப்புழக்கம் பற்றியும், கடந்த ஆண்டுகளில் ருபாயின் செயல்பாடுகளை பற்றியும் ஒரளவு பார்த்தோம். அடுத்தடுத்த கட்டுரைகளில் ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளான, ரெபோ (Repo) ரேட், சி ஆர் ஆர் (Cash Reserve Ratio) அதிகரிப்பு போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.

July 30, 2008 at 3:17 pm 4 comments

30-07-2008

     என் இணையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நேற்று எழுத இயலவில்லை.

     ரிசர்வ் வங்கி எதிர்பார்த்தது போல் பணவீக்கத்தை அடுத்த தேர்தலுக்குள் கட்டுப்படுத்த எதிர்வினையாற்றி இருக்கிறது. அதற்கு சந்தையும் 150-க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்திருக்கிறது. தற்சமயம்  Negative செய்திகள் ஏதும் இல்லையென்பதாலும், அனுசக்தி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவு போன்ற Positive செய்திகளாலும் இன்னும் சில நாட்களுக்கு சந்தை மேலேற வாய்ப்புண்டு. சந்தையின் ரெசிஸ்டென்ஸ் 4575 புள்ளிகளில் உள்ளது என நினைக்கிறேன். அதையும் தாண்டும் பட்சத்தில் சந்தை 4650 புள்ளிகளை தாண்ட வாய்ப்புள்ளது.

      ஆனால் அடிப்படை வலுவிழந்து உள்ளதால், இந்த ஏற்றங்களெல்லாம் தற்காலிகமாகவே இருக்கும். குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து மாட்டிக் கொள்ள ஏதுவாக விரிக்கப்பட்ட வலைகள் என்று கூட சொல்லலாம். சந்தையின் இறக்கங்கள் வெகு வேகமாக இருக்கும். சந்தை 4500 கடந்த நிலையிலும் Negative செய்தியை பொறுத்து வெகு வேகமாக சரியவே வாய்ப்புள்ளது.
      அமெரிக்க சந்தை 250 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் Positive ஆக தொடங்கியுள்ளன. நமது சந்தையும் 100 புள்ளிகளுக்கு மேல் ஆக தொடங்க வாய்ப்புள்ளது. தற்சமயம் சந்தையின் போக்கை தடுக்கும் காரணிகள் : பெரிய தலைகள் செய்ய ஆரம்பித்தல், குண்டு வெடிப்புகள் மட்டுமே. சில பங்குகள் consolidate ஆகி தங்களுடைய சப்போர்ட் நிலையில் உறுதியாக உள்ளன என்பதை கவனித்திருப்பீர்கள். இச்சமயங்களில் அம்மாதிரி பங்குகளை வாங்கும் பட்சத்தில் சந்தையின் தற்காலிக உயர்வில் மேலெற வாய்ப்பு உள்ளன.

Enjoy the Temporary Bull Run!

July 30, 2008 at 6:04 am 3 comments

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Recent Posts

 

July 2008
M T W T F S S
« Jun   Aug »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Follow

Get every new post delivered to your Inbox.