Archive for June, 2008

Apollo Tyres I

      தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தபோது கூவம் ஆற்றின் வழியே சரக்கு போக்குவரத்து நடந்ததாக படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீர் வழி போக்குவரத்து (Waterway Transport)  குறித்து ஆங்கிலேயர் அமைத்திருந்த நீண்ட கால திட்டங்களால் தான் நடைபெற்றது என்றும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நம்மால் அப்பொழுதே நீண்ட கால திட்டங்கள் எதனையுமே வாக்கு வங்கி சம்பந்தப்படாமல் நிறைவேற்ற பட முடியாமல், அனைத்து நீர் வழி போக்குவரத்து வழிகளையும் நாசமாகி விட்டோம் என்ற கருத்தும் உண்டு. இந்தியாவில் நீண்ட கால திட்டங்களை அனைத்தும் வாக்கு வங்கியை ஒட்டி தான் எடுக்கப்படும் என்பதில் எனக்கு எந்த எதிர் கருத்தும் கிடையாது. ஆனால், நீர் வழி போக்குவரத்து தமிழ்நாட்டில் சில முக்கியமான பகுதிகளில் இருந்ததா என்பதற்கு நீங்கள் உங்கள் ஊர் பெரியவர்களிடம் கேட்டு இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

     அதற்கு பிறகு இந்தியா முழுவதும் தரை வழி போக்குவரத்து (Roadway Transport)  தான் முதலிடம் வகிக்கின்றது. பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு தரை வழி போக்குவரத்தையே நம்பியிருக்கின்றோம். லாரி ஸ்ட்ரைக் ( லாரி என்ற வாகனத்தை  ஆங்கிலேயர் நம்மை ஆண்டதால் இந்தியா முழுவதும் இந்த பெயரால் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ட்ரக் என்ற பெயரிலேயே  அழைக்கப்படுகிறது.) என்றால் எப்படி அன்றாட சந்தை ஸ்தம்பித்து விடும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இந்த தரை வழி போக்குவரத்து என்பதை தற்போது ஒரு தனி துறையாகவே கருதலாம். இதில் முக்கியமாக லாரிகள் ( டாடா, அசோக் லேலண்ட்), மினி லாரிகள் (டாடா, அசோக் லேலண்ட், எய்சர்), அதற்கும் சிறிய வாகனங்கள் (டாடா ஏஸ்) போன்றவை பெரும்பாலும் பயன்படுகின்றன. பிறகு மக்களின் போக்குவரத்திற்கு நீண்ட துாரத்திற்கு  பேருந்துகள் (அசோக் லேலண்ட், டாடா), கார்கள் (டாடா, மாருதி, மகிந்திரா), பைக் (பஜாஜ், டிவிஎஸ்) போன்றவை. எப்படியிருப்பினும் நகரில் வாழும் ஒரு பணியாளர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 கிலோ மீட்டராகவது பயணிக்கின்றார்.
      போக்குவரத்து வாகனங்கள் (Transport Vehicles) இத்தனை இருந்தாலும், அதில் முக்கியமான தேவை டயர்கள் (Tyres) . தேய்மானத்தை வைத்து பார்க்கும்போது, ஒரு வாகனத்தில் முக்கியமான பகுதி டயர்கள் ஆகும். ஒரு வாகனத்தை தேய்மானத்தை முன்னிட்டு மாற்றும்போது டயர்களை நிறைய முறை மாற்றியிருப்போம். இந்தியா போன்ற முன்னேறும் நாட்டில் தரைவழி போக்குவரத்து இன்னும் பெரிய பங்கு வகிக்கப்போகின்றது. டயர் விற்பனை பத்து மில்லியனுக்கு மேல் உள்ளது. மேலும் வளர்ந்து வருகின்றது.  இந்த வளரும் துறையில் முதலீடு செய்தால் இரு வருடங்களில் நல்ல இலாபம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
 இந்த டயர் விற்பனையில் இந்தியாவில் உள்ள கீழ்கண்ட குழுமங்கள் இயங்கி வருகின்றன.

1) எம் ஆர் எப் (M.R.F.)

2) அப்போலா டயர்ஸ் (Apollo Tyres)

3) ஜே கே டயர்ஸ் (J.K. Tyres)

4) சியட் (CEAT)

5) டிவிஎஸ் (TVS Tyres)

6) பிர்லா டயர்ஸ் (Birla Tyres)

7) குட் இயர் (Good Year)

 

    மேற்கண்ட குழுமங்களில் எம் ஆர் எப் குழுமமே முதலிடத்தை வகிக்கின்றது என்றாலும் இந்த பகுதியில் பரிந்துரைக்கப்படுவது அப்போலோ டயர்ஸ் தான். 1972-ல் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுமத்திற்கு தற்போது சேர்மனாக இருப்பவர் ஓங்கர் எஸ் கன்வார். இவர் இந்திய சேம்பர் ஆப் காமர்ஸ் (Indian Chamber of Commerce) தலைவராகவும் பதவி வகி்த்தவர். இப்பதவியானது எல்லோருக்கும் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக அரசியல்வாதி பதவி மாதிரி கிடையாது. ஒரு தகுதி உள்ளவர்கள் மட்டுமே அப்பதவியினை ஏற்க முடியும், இதுவரை. தற்போது இருப்பவர் ஐசிஐசிஐ (ICICI Bank) சேர்மனாக இருக்கும் திரு கே வி காமத் ( இவர் குறித்தும் எழுத நிறைய இருக்கின்றது. சமயம் வரும்போது எழுதலாம் என்றிருக்கிறேன்). இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் அளவில் விற்பனை காட்டும் குழுமங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு காலாண்டிலும் மிகச் சிறப்பான இலாபத்தை ஈட்டி வருகின்றது.
      இக்குழுமத்தின் ஒரு வருட அதிக பட்ச-குறைந்த பட்ச விலை : 62.90-31.40. தற்சமயம் 34.10 என்ற அளவில் (கடந்த வெள்ளியன்று) முடிந்திருக்கின்றது. ஒரு வருட குறைந்த விலையை தொடும் அளவில் இருக்கின்றது.

3 comments June 28, 2008

27-08-2008

    

   BLACK FRIDAY?

     அமெரிக்க சந்தை 350 புள்ளிகளை இழந்து ஒரு வருட குறைவான (One Year Low) புள்ளிகளுக்கும் கீழே முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அனைத்தும் சிகப்பு தான். நம் சந்தையும் 100 புள்ளிகளை இழந்து தொடங்க வாய்ப்புள்ளது. கருப்பு வெள்ளி (Black Friday) மனப்பான்மை தற்போது சந்தையில் நிலவியுள்ளது. கடந்த எட்டு சந்தை நாட்களை பார்க்கும்போது எல்லோரும் இதற்காக காத்திருந்தது போல் தெரிகிறது. இன்றைய தினம் காளைகளுக்கும் கரடிகளுக்கும் ஒரு கடைசி யுத்தம். காளைகளின் கையில் உள்ள துருப்புச் சீட்டு. நண்பகலில் வெளியாகும் பணவீக்கம் (Inflation) சதவீதம் குறைவது மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் Positive ஆன ஆரம்பம். கரடிகளுக்கு நேற்றே துருப்புச் சீட்டு கிடைத்துவிட்டது.

    இன்றைய சந்தையில் தின வணிகம் மிகவும் ஆபத்தானது. சந்தையின் முதல் பாதியில் குறைந்தது ஒரு வருட முதலீடு செய்ய மனமிருந்தால் வாங்கலாம். இன்றைய சந்தை -250 முதல் +25 வரை ஆடலாம். பண வீக்க புள்ளி விவரத்தை பொறுத்து ஆக முடிய வாய்ப்புள்ளது. பணவீக்க புள்ளி விவரம் Positive  ஆகவே வெளிவரும் என நம்புகிறேன்.

 இச்சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

Reliance Petroluem, Bharti Airtel, Idea, Reliance, Reliance Capital.

 

Add comment June 27, 2008

26-08-2008

     எல்லா சந்தைகளும் (சீனாவை தவிர) தற்போது Positive இருப்பதால், நமது சந்தையும் துவக்கத்தில் 30-40 புள்ளிகள் gap up  ஆக துவங்கலாம். கச்சா எண்ணெய் விலை சிறிது குறைந்திருப்பதால், சந்தையில் சிறிது உற்சாகம் இருக்கும். வங்கி துறை பங்குகள் அனைத்தும் நல்ல சப்போர்ட் லெவலில் உள்ளதால், சிறிய முதலீடுகள் அவற்றில் செய்யலாம். நாளை விலைவாசி உயர்வு பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவருவதால், நாளின் கடைசியில் சந்தை சிறிது தடுமாறக்கூடும்.

      இன்றைய சந்தை 75 முதல் -60 வரை ஆடும் என நினைக்கின்றேன்.  Positive ஆக முடிய வாய்ப்பு உள்ளது.

      இன்றைய சந்தையில் கீழ்க்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

 

Reliance Petroleum, Deccan Chronicle, Idea, MRPL, Bank of Maharashtra

2 comments June 26, 2008

Next Posts Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30