Archive for June 23rd, 2008

#04 Fundamental Analysis – The Company II

     முதல் பகுதியில் ஒரு குழுமம் எப்படி உருவாக்கப்படுகிறது என்று பார்த்தோம். இப்பகுதியில் ஏன் ஒரு குழுமம் உருவாக்கப்படுகிறது என்று பார்ப்போம். இப்பகுதியில் குழுமம் என்று குறிப்பிடப்படுவது Public Limited Company என கொள்ளலாம்.

     திரு. X என்பவர் ஒரு வணிகத்தில் மிக தேர்ந்த அறிவு கொண்டவர் மற்றும் அந்த வணிகத்தை தொடங்கி நடத்தும் அளவுக்கு பணம் படைத்தவரும் கூட. ஒரு குழுமத்தை தொடங்கி தான் அவர் அதை நடத்த வேண்டுமா? அதற்கு என்னென்ன சிக்கல்கள் பட வேண்டும்? முதலீட்டாளர்களிடம் அவருடைய திட்டத்தை விளக்கி நிதி திரட்ட வேண்டும் (Initial Public Offer) . ஒவ்வொரு காலாண்டும் அவர்களுக்கு வரவு செலவு அறிக்கைகள் (Quarterly Satements)  கட்டாயம் அனுப்ப வேண்டும். முக்கியமான ஒன்று, வரும் இலாபத்தில் அவர்களுக்கும் பங்கு (Dividends) கொடுக்க வேண்டும். இவ்வளவு சிரமங்களுக்கிடையில் எதற்காக அவர் அந்த வணிகத்தை ஒரு குழுமம் ஆரம்பித்து நடத்த வேண்டும்? அவரிடம் பணமும், வியாபார அறிவும் இருக்கையில் அதை தனி வணிகமாகவே நடத்தலாமே! எத்தனை டீக்கடைகள், மளிகை கடைகள், டிபார்மென்டல் ஸ்டோர்ஸ், காஸ்ட் பிரைஸ் ஷாப் அவ்வாறு நடத்தப்படுகின்றன.

     திரு.X என்பவர் ஆரம்பிக்கும் வணிகம் ஒரு கிராமத்தின், நகரத்தின் ஒரு பகுதியில் மட்டுமே நடைபெறும் என்று முடிவு செய்து ஆரம்பித்தால், குழுமம் ஆரம்பிக்க தேவையில்லை. ஆனால், வருங்காலங்களில் அதை பெரிய அளவில் விரிவுபடுத்தும் எண்ணமும், நாட்டின் பல பகுதிகளிலும் ஆரம்பிக்கும் வகையில் நீண்ட கால தொலைநோக்கு திட்டமும் இருக்கும் பட்சத்தில் அவ்வணிகத்தினை குழுமம் முலம் செய்வது தான் மிகச் சிறந்த வழியாகும்.

    தனி நபர் வணிகம் நடத்தும்போது, அவ்வணிகம் மீது அரசு விதிக்கும் வரிகளை எல்லாம் அவர்களே கட்டவேண்டும். அதன் நிலுவைகளுக்கும் அவரே பொறுப்பு. வணிகம் பொருட்டு வாங்கப்படும் சொத்துக்கள் அனைத்தும் அவர் பெயரிலேயே பதியப்பட வேண்டும். இலாபத்திற்கு வருமான வரி அவர் கணக்கிலேயே கழிக்கப்படும். உள்ளுரில் சொத்து வாங்கும்போது பிரச்சினையில்லை. வெளி மாநிலங்களில் வாங்கும்போது, ஏகப்பட்ட சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். அவ்வணிகத்தினை விரிவுபடுத்த நிதி தேவைப்பட்டால் அதற்கு அவர்தான் நிதி ஏற்பாடு செய்ய வேண்டும். திரு X நடத்தும் வணித்தினை விரிவு படுத்த அவர் மற்றவர்களிடம் ( வங்கிகள், தனி நபர்கள்) அக்கடன்கள் அவர் வாங்கிய கடன்களாகவே எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, வியாபாரத்தில் இலாபமோ, நஷ்டமோ எது வந்தாலும் திரு X  மட்டுமே அக்கடன்களுக்கு பொறுப்பு. தவிர்க்க முடியாத சில நேரங்களில் கடன்களை அடைக்க நேரிடும் பட்சத்தில் அவருடைய சொந்த அசையும், அசையா சொத்துக்களும் கடனை அடைக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

     ஓரு குழுமம் என்பது ஆரம்பிப்பது எதற்காக என்றால், இந்திய குழும சட்டத்தின்படி, ஒரு குழுமம் என்பது ஒரு தனி நபர் போல். திரு  X போல் என்று வைத்துக் கொள்வோம். இந்த குழுமம் என்பது பங்குகளால் ஆனது. பெரும்பான்மையான பங்குகளை திரு X என்பவரே வைத்துக் கொள்ளலாம். ஒரு குழுமம் தன் பெயரில் சொத்துக்ளை நிர்வகிக்கலாம். வங்கியில் கடன் வாங்கலாம். வருமான வரி மற்றும் இதர வரிகளை தனது பெயரிலேயே கட்டலாம். அரசாங்கம் அறிவிக்கும் வரி சலுகைகளை அனுபவிக்கலாம்.  என்ன, கல்யாணம் மட்டும் தான் செய்ய முடியாது. இதனால் என்ன நன்மை என்று பார்த்தால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில்கூட ஒரு குழுமத்தின் பெயரில் சொத்துக்களோ அல்லது மற்றொரு குழுமத்தையோ வாங்க முடியும். எவ்வித சட்ட சிக்கல்களும் எழாது.  குழும விரிவாக்கத்திற்கு பணம் தேவையென்றால், எளிதில் அதை முதலீட்டாளர்களிடமிருந்தே திரட்டலாம் (Rights Issue). இலாபத்தினை பிரிக்கும்போது கூட அதிக பங்கு வைத்திருப்பவர்களுக்கு அதிக ஈவுத் தொகை (Dividend)  கிடைக்க வாய்ப்பு உண்டே. சிவில் வழக்குகளில்  ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டுமென்று வைத்துக் கொண்டால், தனி நபர் வணிகம் நடத்துபவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருக்க முயல வேண்டும். குழுமமோ தனது பெயரிலேயே ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்றங்களில் ஆஜராகலாம்.  வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் ஒரு குழுமம் தன் பெயரில் கடன்கள் வாங்கலாம். கடன்களை திரும்ப செலுத்த முடியாத நேரங்களில், குழுமத்தின் பெயரில் இருக்கும் அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

    நிறுவனர்களுக்கு வயதாகி வணிகத்திலிருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்தால் உடனடியாக உங்கள் கையிருப்பில் உள்ள பங்குகளை விற்றுவிட்டு வெளியேறலாம். அக்குழுமத்திற்காக அவர் போட்ட முதல் உடனடியாக ரொக்கமாக மாற்றிக் கொள்ளலாம். ( அந்த நேரத்தில் அப்பங்குகள் சந்தையில் என்ன மதிப்பில் இருக்கின்றதோ அந்த மதிப்பில்) அல்லது அவருடைய குடும்பத்தாருக்கு மாற்றியும் கொடுக்கலாம்.  முக்கியமான விஷயம், காளை சந்தைகளில் அக்குழுமத்தில் உள்ள உங்கள் பங்குகளை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் விற்றுவிட்டு, கரடிகள் சந்தைகளில் வாங்குவது முலம் பெரும் இலாபம் ( இவ்வாறு பெறும் இலாபத்திற்கு குழுமம் வரி கட்டாது, சம்மந்தப்பட்ட நபர் தான் வரி கட்ட வேண்டும்) பெறலாம். இன்னும் சில மாதங்களில் நம் நாட்டில் உள்ள சில பெரிய குழுமங்களின் பிரமோட்டர்கள் இது போன்று தான் செய்ய போகின்றார்கள். ஒரு குழுமத்தின் பங்குகளை வாங்குவதன் முலம் நாமும் அக்குழுமத்தின் அங்கத்தினராக ஆகிவிடுகின்றோம். அக்குழுமத்தின் வளர்ச்சியில் நமக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் எந்த ஏற்ற இறக்கங்களிலும் விற்காமல் கையிருப்பில் வைத்திருக்கும் பட்சத்தில் நாமும் அக்குழுமத்தின் பிரமோட்டர் மாதிரி ஆகிவிடுவோம். என்ன அவர்களிடம் உள்ள பங்கு எண்ணிக்கை நம் கையிருப்பில் உள்ளதை விட சில இலட்சங்களே அதிகமாக இருக்கும்.

 

1 comment June 23, 2008

23-06-2008

     தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் இறங்குமுகமாகவே தொடங்கியுள்ளன. ஆனால் நாளின் மத்தியில் அவை மீளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. நமது சந்தை gapdown அல்லது flat ஆக தொடங்கலாம். நாளின் மத்தியில் ஏதேனும் நல்ல செய்திகள் வரும் பட்சத்தில் உயர வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு, ரிலையன்ஸ் கம்யுனிகேஷன் தொடர்பாக, நிதி அமைச்சகம் சார்பாக. நண்பகலில் உயர வாய்ப்பிருக்கிறது. இன்றைய இரவு அமெரிக்க சந்தைகள் ஏற வாய்ப்பு இருக்கும் என நம்புகின்றேன்.

     ஐரோப்பிய சந்தைகளும் Positive ஆரம்பிக்கும் என்றும் நம்புகின்றேன். பார்ப்போம்.  இன்றைய சந்தை போகும் பாதையில் எதையும் தீர்மானமாக சொல்ல இயலாது என்ற நிலையிலும், சந்தை +75 முதல் -30 புள்ளிகளில் முடியும் என்றே கருதுகின்றேன். கடந்த ஒரு வருடத்தில் பங்கு சந்தையில் இறங்கிய நண்பர்கள் இன்றைய தினம் தின வணிகம் செய்வதை தவிர்க்கலாம்.

 இன்றைய சந்தையல் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

Reliance, Reliance Communication, Idea Cellular, Cairn, Powergrid

Post Market :

     சந்தையின் துவக்கத்தில் கரடிகள் தாக்கினாலும், சமாளித்து ஆகி நண்பகலில் ரிசர்வ் வங்கி கவர்னரின் பேட்டி வரை சீராக சென்று கொண்டிருந்தது நம் சந்தை. அதன் பிறகு, 80 புள்ளிகள் வரை இறங்கி தள்ளாட ஆரம்பித்தது. ஐரோப்பிய சந்தைகள் எதிர்பார்த்தது போல் Positive ஆக முடிந்தன. இன்றைய அமெரிக்க சந்தையின் முடிவை பொறுத்து நாளை நாம் ஒரு சிறிய ஏற்றத்தை எதிர்பார்க்கலாமா என்பது தெரியும்.
 

     முக்கியமான  நிகழ்வுகள் : ரிலையன்ஸ் ரு.2000/- வரை வந்தது. ரிலையன்ஸ் கேபிடல் முன்று இலக்கங்களுக்கு சென்றது. லார்சன் & டுப்ரோ பங்குகள் கரடிகளின் பிடிக்குள் வந்து விட்டதா என்பதை போனஸ் செய்தி குறித்து அக்குழுமம் வெளியிடும் அறிக்கையை பொறுத்து உள்ளது.

Add comment June 23, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30