Archive for June 20th, 2008

20-06-2008

     அமெரிக்க சந்தை Positive ஆக முடிந்திருக்கிறது. ஆசிய சந்தைகள் Mixed ஆக இருக்கின்றன. நமது சந்தை இப்போது ஒரு தராசை போல் இருக்கிறது. கடந்த இரு நாட்களாக முக்கிய செய்திகள் ஏதும் இல்லையென்ற போதிலும், கச்சா எண்ணெய் ( Crude Oil)  என்ற ஒரே ஒரு புள்ளி விவரம் மட்டுமே சந்தையை ஆட்டுவிக்கிறது. இன்றைய சந்தையில் விலைவாசி உயர்வு புள்ளி விவரத்தை பொறுத்தே சந்தையின் போக்கு தீர்மானிக்கப்படும்.

     இன்று நண்பகலில் வெளியாகவிருக்கும் விலைவாசி புள்ளி விவரம் 10 ஐ தாண்டும் என்று சென்ற வாரம் முதல் பல speculations வெளியாகின. ஆனால், விலைவாசி உயர்வு இன்று 9 புள்ளிக்கும் குறைவாக ( சென்ற வாரத்தைவிட குறைவாக  தான் இருக்கும் என நினைக்கிறேன்) வரும் பட்சத்தில் சந்தை மேலெற வாய்ப்பு உள்ளது.

 இன்றைய சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

RPL, L & T, Indian Hotels, ICICI Bank.

Post Market :

     விலைவாசி புள்ளி உயர்வு இவ்வாறு இருக்குமென மத்திய அரசு எதிர்பார்த்ததுதான் என்று கூறிய போதிலும், முதலீட்டாளர்கள் ( என்னையும் சேர்த்துதான்) எதிர்பார்க்கவில்லை என்பதால் சந்தை சடாரென சரிந்துவிட்டது. குறிப்பாக ரிலையன்ஸ் பங்கினை கரடிகள் தாக்க தொடங்கி சந்தையை முன்னேற விடாமல் பார்த்துக் கொண்டனர். வரும் வாரங்களில் இந்நிலைகளில் சிறிது முன்னேற்றம் காண வாய்ப்புண்டு என நினைக்கிறேன். குறிப்பாக கச்சா எண்ணெய் விலை குறையும் பட்சத்தில் சந்தை இழந்த புள்ளிகளில் பாதியாவது மீள எட்டி பிடிக்கும் என நம்புகிறேன்.

1 comment June 20, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30