Archive for June 15th, 2008

#2 Fundamental Analysis : Some Data

    Funadamental Analysis என்பது தொடர் செயல்.  ஒவ்வொரு குழுமத்தை ஒருமுறை மட்டுமே Analysis செய்து ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. ஒரு குழுமத்தை பற்றி செய்ய நமக்கு கீழ்க்கண்ட தகவல்கள் தேவைப்படுகின்றன:

1) வணிகம் (Business)

2) அதனுடைய கணக்கு வழக்குகள் விவரம்
    

 1) லாப நஷ்ட கணக்குகள் ( Profit and Loss Accounts)
   

  2) Balance Sheet

3) போட்டியாளர்கள் விவரம் ( Competitors)

4) மேலாண்மை திறன் (Management Performance)

5) தலைமையதிகாரி திறன் (Chief Executive Officer’s Performance)

வணிகம் (Business)
     இக்குழுமத்தின் முக்கிய வணிகம் (Basic Revenue Source)  எது என்பதில் எந்தவித குழப்பமும் இருக்கக் கூடாது. ஒரு குழுமத்தின் முக்கிய வருவாய் ஆதாரம் எந்த வணிகத்தில் வருகின்றது என்பது முக்கியம். ஒரு குழுமம் ஆரம்பத்தில் ஒரு பொருள் விற்பனையை முக்கிய வருவாய் ஆதாரமாக கொண்டிருந்து, சில ஆண்டுகளுக்கு பிறகு வேறொரு பொருள் விற்பனையை முக்கிய வருவாய் ஆதாரமாக மாற்றினால் மீண்டும் அக்குழுமத்தை மீண்டும் Analysis செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஐ.டி.சி (I.T.C) குழுமம் தன்னுடைய முக்கிய வருவாய் ஆதாரமாக சிகரெட் விற்பனையை கொண்டுள்ளது. ஆனால் தற்போது அக்குழுமம் தங்குமிடங்கள் (Hotels and Resorts) மற்றும் உணவு பொருட்கள் விற்பனையிலும் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. ஆனால், இன்றும் அக்குழுமத்தின் முக்கிய வருவாய் ஆதாரம் சிகரெட் விற்பனை தான்.

2) கணக்கு வழக்குகள் விவரம் (Accounting Books)
     பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் அனைத்து குழுமங்களுமே தங்களின் கணக்கு புத்தக விவரங்களை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்பதும், தங்களின் கணக்கு புத்தகங்களை உரிய காலத்திற்குள் தணிக்கை (audit)  செய்து விட வேண்டும் என்பதும் கட்டாயம். சில குழுமங்கள் தங்கள் கணக்கு புத்தகங்களை சில வருடங்கள் வரை தணிக்கை செய்யாமல் வைத்திருக்கும். SEBI தற்போது இந்நிலையை மாற்றியுள்ளது. அனைத்து நிறுவனங்களுமே குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்கு தணிக்கை செய்யாவிட்டால் சந்தையிலிருந்து நீக்கப்படும் (delist)  என அறிவித்துள்ளது. இது பற்றி பின்னர் விளக்கமாக பார்க்கலாம்.

3) போட்டியாளர்கள் ( Competitors)

     ஒரு வணிகம் நன்றாக நடக்கிறதா, எதிர்காலங்களில் இன்னும் நன்றாக நடக்குமா என்பதை அவ்வணிகத்தை மேற்கொண்டுள்ள குழுமங்களின் செயல்பாடுகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஒரு குழுமத்தின் போட்டியாளர்களின் செயல்திறனை பற்றி ஆராயாமல் ஒரு குழுமத்தின் செயல்திறனை பற்றி அறிய முடியாது.

4) மேலாண்மை திறன் (Management Performance)

     ஒரு குழுமத்தின் மேலாண்மை திறன் அக்குழுமம் நெருக்கடியான நேரங்களில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறது என்று பார்த்தாலே தெரியும். அவ்வாறு செயல்படும் திறன் கொண்ட மேலாண்மை தான் ஒரு Blue Chip  தகுதி கொண்ட குழுமம். உதாரணத்திற்கு Infosys மற்றும் L & T யை சொல்லலாம். Infosys  அமெரிக்க செலாவணியை பெரும்பாலும் நம்பி வணிகம் (Software Export) செய்வது . ஆனால், அமெரிக்க பொருளாதாரம் தற்போது மந்தகதியில் (Recession)  இருந்தாலும் இக்குழுமம் தன்னுடைய BPO Unit முலம் பெரும்பாலான வணிகத்தை மாற்றியுள்ளது. டாலரின் மதிப்பு குறைந்த போதிலும் இக்குழுமம் அதனுடைய வணிகத்தை diversify செய்து சென்ற காலாண்டு (March 2008 )  நல்ல இலாபம் கொடுத்துள்ளது.

5) தலைமையதிகாரி திறன் ( Chief Executive Officer’s Performance)

     தலைமையதிகாரி என்பவர் ஒரு குழுமத்தின் பெயரை சொன்னவுடன் நினைவுக்கு வருபவர். அக்குழுமத்தின் வளர்ச்சியில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு. உதாரணத்திற்கு, ரிலையன்ஸ் (Reliance) என்றால் அம்பானி,  ஐடியா (Idea Cellular)  என்றால் பிர்லா. இதை ஏன் பார்க்க வேண்டும்? உதாரணத்திற்கு டாடா தொழிற்குழுமம் (Tata Group)  ( டாடா மோட்டார்ஸ், டாடா பவர் போன்ற குழுமங்களை உள்ளடக்கியது) தலைமை பதவியை வகிப்பவர் ரத்தன் டாடா. அவர் ஒரு பிரம்மச்சாரி. ஓய்வு பெறும் நோக்கமும் தனக்கு உள்ளது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். டாடா குடும்பத்திலிருந்து மற்றொரு தகுதியான நபர் வருவார் என்றாலும், இதுவரை யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் இத்தொழிற்குழுமங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் கவலை நியாயமனது தானே!

     இந்த தகவல்களை எவ்வாறு திரட்டுவது மற்றும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் வரும் நாட்களில் பார்ப்போம்.

 

2 comments June 15, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30