Archive for June 8th, 2008

Discussion #1 Investment Basics

Mr. X என்பவர் ஒரு பெரிய பணக்காரர். உங்களுக்கு நெருங்கிய நண்பர். அவருக்கு நான்கு கடைகள் உண்டு. ஆளுங்கட்சிக்கு வேண்டியவரும் கூட.என்னென்ன கடைகள் என்று பார்ப்போம் :

1)  X DVD Paradise

       இக்கடையில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களின் DVD விலைக்கு கிடைக்கும். ஊரில் மிகப்பெரிய கடை அதுதான். முதலீடு 5 இலட்சங்கள். இலாபம் வருடத்திற்கு 20 முதல் 25 சதவிகிதம் வரை.

2) X ரியல் எஸ்டேட்

    நிலங்கள் வாங்கி விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போட்டியாளர்கள் அந்த ஊரில் உண்டு. முதலீடு 10 இலட்சங்கள். இலாபம் வருடத்திற்கு 10 முதல் 15 சதவிகிதம் வரை.

3) X Blue Metals

     ஆற்று மண், கருங்கல் ஜல்லிகள் போன்றவற்றை விநியோகம் செய்யும் கடை. போட்டியாளர்கள் உண்டு. முதலீடு 6 இலட்சங்கள். இலாபம் வருடத்திற்கு 25முதல் 35 சதவிகிதம் வரை.

4) X நகைக் கடை

     தங்க, வெள்ளி நகை, பாத்திரங்கள் விற்கும் கடை. இதற்கும் போட்டியாளர்கள் உண்டு. முதலீடு 25 இலட்சங்கள். இலாபம் 20 முதல் 25 சதவிகிதம் வரை.

     உங்களிடம் உள்ள சேமிப்பு நிதியிலிருந்து 50 சதவிகிதம் ( 3 இலட்சம் என்று வைத்துக் கொள்வோம்) தன்னுடைய ஏதாவது ஒரு கடையில் முதலீடு செய்ய சொல்கிறார். இலாபத்தினை முதலீட்டுக்கேற்றவாறு பிரித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

 

     உங்களுடைய முடிவு என்ன? ஏன் அந்த முடிவை எடுத்தீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

1 comment June 8, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

June 2008
M T W T F S S
« May   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30