Archive for June 6th, 2008
06-06-2008
அமெரிக்க சந்தை 200 புள்ளிகளுக்கு மேல் முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் ஏறுமுகமாகவே தொடங்கியுள்ளன. நமது சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் தாண்ட வாய்ப்பு உண்டு. விலைவாசி உயர்வு பற்றிய அறிக்கை நண்பகலில் வெளியான உடன் ஒரு சிறிய சரிவு ஏற்பட வாய்ப்பு உண்டு என கருதுகிறேன். புதியவர்கள் சந்தையின் ஆரம்பத்தில் அவசரபட்டு புதிய முதலீடு எதனையும் மேற்கொள்ள வேண்டாம். அனைத்து நிப்டி பங்குகளுமே 2-3% அதிகமாக தான் ஆரம்பிக்கும். லார்சன் & டுப்ரோ ( L & T) நிறுவன பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்காக சிறிது சிறிதாக Accumulate செய்யலாம். ஜனவரி மாதம் 2008 அந்நிய முதலீட்டாளர்கள் விற்ற தொகை குறித்து அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா இந்த வாரம் அறிக்கையில் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
இன்றைய சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
L & T, Suzlon Energy, RPL, ITC
2 comments June 6, 2008