Archive for June 5th, 2008
#1 Why Fundamental Analysis
லார்சன் & டுப்ரோ( L & T) பங்கின் முக மதிப்பு (Face Value) ரு.2 ஆகும். பங்கு சந்தையில் ரு.2700-2800 என்ற அளவில் விற்பனையாகிறது. அக்குழுமத்தின் கணக்கு புத்தகங்களில் அனைத்திலும் இப்பங்கின் மதிப்பு ரு.2 என்ற குறிப்பிட படுகிறது. சந்தை மதிப்பில் கிட்டதட்ட 1400 மடங்கு அதிகமாக விற்பனை ஆகிறது. எப்படி?
Fundamental Analysis என்றால் என்ன? அதை கற்றுக் கொண்டு என்ன ஆக போகிறது? இதனால் எனக்கு என்ன இலாபம்? நான் படித்தது அறிவியல், கணக்கியலை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, என்னால் எப்படி கற்றுக் கொள்ள முடியும்? கணக்கியலின் கோட்பாடுகள் மிகவும் கடினமானவை என்று கேள்வி பட்டிருக்கிறேன். சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் எல்லோரும் இதனை கற்றுக் கொண்டா வருகிறார்கள்? இதனை கற்றுக் கொள்ள நீண்ட காலம் ஆகும் என்று நினைக்கிறேன். ஏதாவது உபயோகம் இருக்குமா?
இத்தனை கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். நம்மில் பலர் சொந்த வியாபாரம், தனியார் நிறுவனங்களில் வேலை இது போன்ற நிலைகளில் இருக்கலாம். அதில் ஒரு முக்கியமான திறமை : மனிதர்களை எடை போடும் திறமை. மிகத் துல்லியமாக கணிக்க முடியாவிட்டாலும் ஒரளவு நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை பற்றி ஒரு அபிப்பிராயம் நம்மால் சொல்ல முடிகிறது இல்லையா? இத்திறமை நம்மை அறியாமலே நம்மிடம் இருக்கிறது. இதில் பெண்களின் கணிப்பு மிகச் சரியாக இருக்கும் என்று பொதுவாக சொல்வார்கள்( சொந்த அனுபவம் ஏதும் இல்லை). நம்முடைய அன்றாட வாழ்வில் இத்திறமை நம்முடைய Survival காக பயன்படுகிறது. அதுபோல பங்கு சந்தையில் நாம் தாக்கு பிடிக்க இத்திறமையை கூர்திட்டி வைத்துக் கொள்வது நல்லது.
பங்கு சந்தையில் விற்பனையாகும் பங்குகளை பற்றி ஒரளவு கணிக்க இந்த உதவுகிறது. பங்கின் குணநலன்களை பற்றி ஒரளவு துல்லியமாகவே கணித்து விடலாம். எப்படி பங்குகளை பிரிக்கலாம்?
சில வகை பங்குகள் வடிவேலு மாதிரி (“பார்க்க ஸ்ட்ராங்கா இருக்கும், ஆனா பேஸ்மென்ட் வீக்”), கமல் மாதிரி ( சிறிது குழப்பமாக இருக்கும் கணக்கு வழக்குகள்), சூர்யா மாதிரி (ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒவ்வொரு மாதிரி). நீங்களும் சில வகை பிரிவுகள் சொல்லுங்களேன்.
கணக்கியலின் அத்தனை கோட்பாடுகளையும் (Principles) நான் கற்று கொடுக்க போவதில்லை. அத்தனையும் தேவையும் இல்லை. நாம் என்ன Company Accounts தயார் செய்ய போகிறோமா, இல்லையே! அவர்கள் தயார் செய்ததை மேற்பார்வை (Supervise) இட போகிறோம். அவ்வளவே! கணக்கியலின் சில கோட்பாடுகளை பற்றி மட்டும் மிக எளிதாக விளக்க முயற்சி செய்கிறேன்.
இதனை கற்றுத் தேற சிறிது காலம் பிடிக்கும் தான். அதனால் என்ன? நீச்சல் கற்றுக் கொள்ள சிறிது காலம் பிடித்தாலும், வெள்ளத்தை கண்டு பயப்படவேண்டியதில்லை அல்லவா!
உபயோகம் ஏதானும் இருக்குமா? கற்றுக் கொண்ட பிறகு நீங்கள் தான் சொல்லவேண்டும்.
இத்தொடரில் சில கணக்கியல் கோட்பாடுகள் (Accounting Principles), இனங்களை (Terms) முடிந்த மட்டில் தமிழில் மொழி பெயர்க்க முயல்கிறேன். அருகில் அதன் ஆங்கில சொல்லை கொடுக்கின்றேன். சில இனங்கள் மொழி பெயர்க்க இயலாவிடில், ஆங்கில சொல்லையே உபயோகப்படுத்துகிறேன்.
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் இத்தொடர் முடிவதற்குள் உங்களுக்கு தெரிந்து விடும். தற்போது யாருக்கேனும் தெரிந்தால் உடன் பகிர்ந்து கொள்ளலாம்.
3 comments June 5, 2008
05-06-2008
அமெரிக்க சந்தை ஒரு வருட குறைவு புள்ளிகளுக்கு அருகே இருக்கிறது. நமது சந்தை மாதிரியே அங்கேயும் Selling Pressure அதிகம் என்பதால் தொடர்ந்து இறங்குமுகமாகவே முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் இறங்கு முகமாவே தொடங்கியுள்ளன. நமது சந்தையும் அவ்வாறே gap down தொடங்க வாய்ப்புண்டு.
பெட்ரோல் விலையேற்றத்தில் மத்திய அரசு மிகுந்த தாமதமாக முடிவெடுத்தாலும், தீர்க்கமான முடிவையே எடுத்துள்ளது. ஏற்றப்பட்ட விலையை இரத்து செய்ய முடியாது என தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. இதை அவர்கள் சிறிது காலத்திற்கு முன்னரே செய்திருக்கலாம்.
நமது சந்தை இன்று gap down ஆக தொடங்கினாலும், சில நட்சத்திர பங்குகள் ஒரு வருட குறைவான விலைக்கு கீழ் செல்ல விருப்பதால் வாங்குபவர்கள் அதிகரிக்கக் கூடும். இன்றைய சந்தை 60-70 புள்ளிகளுக்கு மேல் இறங்கி தொடங்கினாலும் நாளடைவில் ஒரு சிறிது bounce இருக்கக் கூடும். சந்தை முடிவில் 10-20 புள்ளிகள் அல்லது flat ஆக முடிய வாய்ப்புண்டு என்றே கருதுகிறேன். 100 புள்ளிகளுக்கு மேல் இறங்கினால், வேறு என்ன? 4300 களில் தான் போய் நிற்கும். சில மியுட்சுவல் நிறுவனங்களின் செயல்பாட்டினை பொறுத்தே இன்றைய சந்தையின் முடிவு நிர்ணயிக்க படும் என்றே நினைக்கிறேன்.
இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
Bharti Airtel, Unitech, MRPL, Axis Bank.
Add comment June 5, 2008