Archive for June 2nd, 2008
02.06.2008 Post Market
சந்தையின் முதல் சப்போர்ட் லெவல் தகர்ந்து விட்டது. நிப்டி குறியீட்டில் உள்ள சில பங்குகள் வருட குறைந்த விலையின் அருகில் உள்ளன. தற்சமயம் வரை அமெரிக்க சந்தை 200 புள்ளிகளை இழந்து இருக்கிறது. இதே நிலையில் முடிந்தால், நாளைய சந்தை ஆரம்பத்திலேயே சரிய கூடும். சரிந்தால் எது வரை முடியும் என்பது தெரியவில்லை. சந்தையில் இருக்கும் காளைகள் ( இருந்தால்?) கடைசியாக ஒரு போராட்டத்தை நடத்தக் கூடும்.
இந்த நிலையில் பதற்றத்துடன் சந்தையை எதிர்கொள்ளாமல் நிதானத்துடன் அனுகவேண்டும். ரொக்கம் வைத்திருப்பவர்கள் நிதானமாக தங்கள் வேட்டையை தொடங்கலாம். பங்குகள் வைத்திருப்பவர்கள் பதற்றமடைந்து கையிலிருக்கும் பங்குகளை அடிமாட்டு விலையில் விற்கவேண்டாம். (சொல்வது எளிது செய்வது கடினம் என்று தோன்றுகிறது அல்லவா? ஆரம்ப நிலைகளில் நானும் இத்தவறுகளை செய்திருக்கிறேன்.) இந்நிலை தற்காலிகமானதே. கையிலுள்ள பங்குகள் நல்ல அடிப்படையை கொண்டிருப்பின் மீண்டும் பழைய விலைக்கு போக அதிக நாட்கள் எடுத்து கொள்ளாது. சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று கடன் வாங்கியெல்லாம் முதலீடு செய்யாதீர்கள். பருவ மழை போன்ற Positive காரணங்கள் கரடியின் பிடியில் இருந்து சந்தையை தற்சமயம் விடுவிக்காது என தோன்றுகிறது. தற்போதைய சந்தையில் மழை காலத்தில் கூட குடை கம்பெனி விலை ஏறாது என்று தான் தோன்றுகிறது.
உங்களிடம் உபரியாக உள்ள, இரு வருடங்கள் வரை அவசர தேவையில்லாத ரொக்கத்தினை மட்டுமே முதலீடு செய்யுங்கள். காலையில் விரிவாக எழுத முயற்சி செய்கிறேன்.
Sleep Well and Good Night!
Add comment June 2, 2008