Archive for May, 2008

28.05.2008

     அமெரிக்க சந்தை Positive ஆக முடிந்திருக்கிறது. தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் Negative தொடங்கியுள்ள போதிலும் நாளடைவில் Positive ஆக மாற கூடும். நமது சந்தையும் Positve ஆக தொடங்கும். கடந்த ஒரு வாரமாக சந்தை தடுமாறி வருகிறது. Short covering என்பது கடந்த மற்றும் இந்த வார Strategy என்றே ஆகிவிட்டது.  இந்த வாரம் சந்தை 5100 என்ற புள்ளிகளை தாண்டும் என நம்புகிறேன்.

     இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

NTPC, Idea, JK Paper, RCF,Powergrid.

Add comment May 28, 2008

27.05.2008

     நேற்று அமெரிக்க சந்தைகள் அனைத்திற்கும் விடுமுறை நாள். இன்றைய ஆசிய சந்தைகள் Positive ஆக தொடங்கியுள்ளன. நமது சந்தையும் Positive ஆக தொடங்கும் என நினைக்கிறேன்.வழக்கம்போல் Selling Pressure இருக்கும்.

     கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலை உயர்வை பற்றி மத்திய அரசு தீவிரமாய் பரிசீலித்து வருகிறது. ரு.17 வரை விலை உயர்த்த போவதாய் செய்திகள் வெளியாகின்றன. இதனை இடது சாரிகள் வழக்கம்போல் எதிர்க்காமல், இதை தீவிரமாய் வேறு கட்டத்திற்கு கொண்டுபோக கூடும். நம் நாட்டில் அரசின் முக்கிய கொள்கை முடிவுகள் அனைத்தும் “மக்களின் ஒட்டு” என்பதை வைத்தே அளக்கப் படுகின்றன. இது குறித்து தீவிரமாய் எதிர்ப்பு கிளம்பலாம்.
      இத்தருணங்களில் நாம் செய்ய கூடியது என்ன? பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என முடிவு செய்து Oil Sector பங்குகளை வாங்கலாமா அல்லது இன்னும் சிறிது நாள் பொறுத்திருப்பதா என்ற முடிவு செய்ய வேண்டும். அத்துறையை சார்ந்த பங்குகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரு வருட குறைந்த விலையையொட்டி விற்பனையாகி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது. உடனடி இலாபம் எதிர்பார்க்க முடியாது. குறைந்தது ஒரு வருடமெனும் வைத்திருக்க வேண்டும்.

     முதலில் நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால், சைக்கிள் ஒட்ட பழகி கொள்வது தான் என்றே நான் சொல்வேன். சைக்கிள் என்பது இரு சக்கரங்களை கொண்ட ஒரு உபகரணம். பெடல் உண்டு. கிளட்ச் கிடையாது. பெடலை மிதித்தால் உருண்டு ஒடும். முக்கிமாக எரிசக்தி தேவையில்லை அந்த உபகரணத்திற்கு. மிதிப்பவருக்கு தேவை.

 இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

PTC India, Dabur India, MRPL, ITC.

Be Happy !

1 comment May 27, 2008

26.05.2008 Post Market

      வெள்ளிகிழமையன்று கொடுத்த Home Work நிறைய பேர் உங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தீர்கள். ஆனால் எல்லோரும் என் ஈ மெயில் முகவரியில் அனுப்பிள்ளீர்கள். அனைத்து கருத்துகளும்  ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  சிலர் மட்டுமே  Suzlon Energy  பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. கருத்துகளை தமிழில், பின்னுாட்டத்தில் கொடுத்திருந்தால் அனைவரும் பார்க்க வசதியாக இருந்திருக்கும். நன்றி, உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதிற்கு. நண்பர் புவன் மட்டுமே பின்னுாட்டத்தில் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவருக்கும் நன்றி. கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் ரு.50,000/- மதிப்புள்ள ( கற்பனையை ரொம்ப அலையவிட வேண்டாம்) பங்குகள் பரிந்துரைகள் அவர்கள் ஈ மெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்.  மீண்டும் அடுத்த வாரம் வெள்ளி கிழமையன்று புது தலைப்பை  பற்றி அலசலாம்..

Add comment May 26, 2008

Next Posts Previous Posts


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031