Archive for May 13th, 2008
Feedback 13.05.2008
நண்பர் புவனுக்கு,
வாங்கலாமா என்ற உங்கள் கேள்வியில் நீங்கள் எவ்வளவு காலம் வைத்திருக்க போகிறீர்கள் என்பதை குறிப்பிடவில்லை.
நீங்கள் முதலீடு செய்ய உத்தேசிக்கும் குழுமங்கள் ஒரே துறையில் முத்திரை பதிக்கும் அரசு நிறுவனங்கள்.ஒரே துறையில் இருக்கும் முன்னணி குழுமங்களில் அத்தனையிலும் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது என்று நான் கருதுகின்றேன்.
இக்குழுமங்களில் எவற்றை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எனில் வெகு எளிதாக தீர்வு காணலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ்கானும் கேள்விகளுக்கு விடை கண்டு பிடிப்பதுதான்.
1) மேற்கண்ட குழுமங்களில் எது புத்தக மதிப்பிற்கு குறைவாக அல்லது அதற்கு அருகில் விற்பனையாகின்றது?
2) எக்குழுமம் கடந்த ஆறு காலாண்டு அறிக்கைகளில் விற்பனையை கணிசமாக உயர்த்தி காட்டியிருக்கின்றது?
3) எக்குழுமத்தில் ரிசர்வ் தொகை பங்கு முலதனத்தை விட அதிகமாக இருக்கின்றது? கடைசியாக போனஸ் கொடுத்த குழுமம் எது? போனஸ் கொடுத்த கால இடைவெளி?
4) கடந்த நான்கு மாதங்களில் எக்குழுமங்களில் மியுச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன? அல்லது பெரிய அளவில் விற்பனை செய்துள்ளன?
5) எக்குழுமம் ஒரு வருட குறைவு தொகைக்கு அருகில் விற்பனையாகின்றது?
6) அரசின் மாற்று எரிபொருள் கொள்கை பற்றி ஏதேனும் விவரம். முதலீடு ஒரு வருடத்திற்கு மேல் எனில் இக்கேள்விக்கு விடை கானுவது தற்போது அவசியமில்லை.
இன்னும் சில கேள்விகள் இருக்கின்றன. மேற்கண்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தாலே போதும்.
நல்லது, புவன். நான் இதே கேள்வியை உங்களிடம் கேட்டால் எனக்கு என்ன பதில் கூற போகிறீர்கள்?
நண்பர் பாலகீதைக்கு,
பங்கு சந்தை எனது முழு நேர தொழில் அல்ல.
1 comment May 13, 2008