Archive for May 12th, 2008

13.05.2008

அமெரிக்க சந்தை தற்சமயம் Positive ஆக உள்ளது. முடிவும் அப்படிதான் இருக்கும். நாளை நமது சந்தையும் தான் Positive & Gap up  துவங்கும்.

 அமெரிக்காவுடன் இந்திய  Atomic Commission செய்துள்ள ஒப்பந்தம் தொடர்பாக இடது சாரிகளின் நிலை பற்றி இது வரை சரிவர தெரியாத நிலையில், நாளை சந்தை துவங்கும்போதோ, நண்பகலில் ஊடகங்கள் இச்செய்தி பற்றி பல speculations வெளியிட்டு சந்தையை அலைபாய செய்யலாம். 

டாலர் மீண்டும் recover ஆகி இருப்பது தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளுக்கு ஒரு ஊக்கமளிக்கும் செய்தி. நேற்று அவர்களால்தான் சந்தை recover  ஆனது. 

அதே சமயத்தில் இவ்விஷயத்தில் நாம் கற்றுக் கொள்ள ஒரு பாடம் இருக்கின்றது. அமெரிக்க பொருளாதாரம் sup-prime , Crude Oil Price போன்ற பிரச்சினைகளால் மாட்டிக்கொண்டு சரிந்தாலும், மீண்டும் recover ஆகி விடுவதற்கு காரணம் அந்நாட்டு தொழில் துறை அடிப்படையில் மிகவும் பலமாக உள்ளது. அது மட்டுமல்ல, தகவல் தொழில்நுட்பத்தில் மிகுந்த முன்னேற்றம் (நாமும் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கினாலும், அதன் பலனை பெரும்பாலான நமது மக்கள் அனுபவிப்பதில்லை) , பொருள் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவை அமெரிக்க பொருளாதாரத்தை எப்போதும் மீண்டுவர  செய்யும். மற்றொரு முக்கிய காரணம் அந்நாட்டு மக்களின் முனைப்பு மற்றும் ஆர்வம். இப்பகுதி நீண்டு விட்டதால், இது குறித்து தனியே எழுத ஆசைப்படுகின்றேன்.

Happy hunting!

 

5 comments May 12, 2008

Ballarpur Industries II

ஒரு துறையை சார்ந்த பங்கினை வாங்கும்போது அடுத்த ஐந்து ஆண்டுகளில் அத்துறையின் வளர்ச்சி பற்றிய விவரங்களை கண்டிப்பாக நாம் அறிந்து கொண்டாக வேண்டும். ஐந்து ஆண்டுகள் என்பது பங்கு சந்தையில் ஒரு குறிப்பிடதக்க காலம்.

இத்துறையை பற்றிய நீங்கள் மேற்கொண்டு அறிய வேண்டிய விவரங்கள் :

பாரசீகர்கள் காலத்தில் காகிதங்கள் தயாரிக்க சரி… சரி….. காகித கூழ் தயாரிக்க காடுகள் அழிக்கப்படுகின்றன என தற்போது பன்னாட்டு தன்னார்வு நிறுவனங்கள் போராட்டக் கொடி துாக்கியுள்ளன.

சுற்றுசூழல் பிரச்சினை காரணமாக காகிதத்தின் பயன்பாடு குறைக்க அரசு பன்னாட்டு நிறுவனங்களால் வலியுறுத்தப்படலாம். ஆனால் அப்படிபட்ட சூழலில் நாட்டின் அனைத்து பகுதிகளும் wi-Fi ஆகியிருந்தால் மட்டுமே காகிதத்தின் பயன்பாடு குறைய கூடும். ஆனால் அதற்கு குறைந்தது 5 வருடங்கள் வரை வாய்ப்பு இல்லை. இப்பவே அங்க போராட்டம் ஆரம்பிச்சுட்டாங்க. ( Harry Potter புத்தக விஷயத்தில் நடந்தது).  நம்ம நாட்டுக்கு வர இன்னும் ஐந்து வருடம் வரை ஆகும். காகித கூழ் தயாரிப்பதற்காக காடுகளை அழிக்கக் கூடாது என்று நம் நாட்டிலும் போராட்டம் ஆரம்பிக்கலாம்.

 மாற்று ஏற்பாடுகளை இத்துறையில் உள்ள குழுமங்கள் மறுசுழற்சி (Recycling) முறையில் காகித உற்பத்தி  ஆரம்பிக்கலாம். ஆனால் இவ்விஷயத்தில் யார் முந்திகொள்ள போகிறார்கள் என்பது  இனிமேல் தான் தெரியும்.  எப்படியிருப்பினும் காகிதத்தின் பயன்பாடு நம் நாட்டில் வரும் வருடங்களில் அதிகரிக்க செய்யுமே தவிர குறைவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், சுற்று சூழல் பிரச்சினை (Environmental concern)  என்பது இனிவரும் காலங்களில் ஒரு முக்கிய பங்கு வகிக்க போகின்றது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

 சுற்றுசூழல் குறித்தும் தனியாக எழுதலாம் என்று உள்ளேன். வருங்காலத்தில் பங்கினை வாங்கி விற்கும் முடிவுவெடுக்க  இதுவும் ஒரு காரணியாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.
 இத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் இது குறித்து தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய தங்களது ஆராய்ச்சி துறையினை (Research and Development Dept.)  முடுக்கி விட்டுள்ளன.

 இனி போட்டியாளர்களை பற்றி :

 1. தமிழ்நாடு நியுஸ்பிரிண்ட்

நம்ம ஏரியா கம்பெனி. நல்ல விற்பனை. ஒவ்வொரு காலாண்டும் நல்ல வளர்ச்சி. தற்சமயம் இரண்டாமிடத்தில் உள்ளது. நிர்வாக மேலாண்மை நன்றாக உள்ளது. அரசு நிறுவனம். முக மதிப்பு ரு.10/-

 2. J. K. பேப்பர்.
  ஜே. கே. குழுமத்தில் ஒர் அங்கமான ஜே.கே. பேப்பர் தற்போது முன்றாமிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்திற்கு தீவிரமாய் முயற்சி செய்து வருகின்றது. முக மதிப்பு ரு.10/-. நீண்ட கால முதலீட்டிற்கு இக்குழுமமும் ஏற்றது. திறமையான மேலாண்மை. தமிழ்நாட்டில் கூட நல்ல விற்பனை முகவர்களை கொண்டிருக்கின்றது. தற்போது புத்தக மதிப்பை விட   சந்தை விலை குறைவாக உள்ளது. 

Add comment May 12, 2008

Ballarpur Industries

பத்து வருடங்களுக்கு முன் தனியார் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் அறிக்கை தயார் செய்யும் போது ஏதோ ஒரு பேப்பரில் (பெரும்பாலும் டிம்மி சைஸ்) தயார் செய்து அனுப்புவார்கள். 
தற்போது தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களிலும் அறிக்கைகள் அனுப்பும்போது A4 பேப்பரில் மட்டுமே அனுப்ப வேண்டும் என கோரப்படுவதாக அறிகின்றோம்.  “காகிதமில்லா அலுவலகம் (Paperless Office)” என்ற கான்செப்ட் சில வருடங்களுக்கு முன் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  ஆனால் அதற்கு பிறகுதான் காகிதத்தின் உபயோகம் அரசு அலுவலகங்களில் அதிகரித்தது.  பேப்பர் சைஸ் கடைநிலை   ஊழியருக்கும் தெரிகின்றது. கடந்த ஐந்து வருடங்களாக பிரிண்டர்களின் விற்பனையும் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது.

தெருவிற்கு ஒரு ஜெராக்ஸ் ( இது ஒரு தனி காமெடி. தற்போது ஜெராக்ஸ் மெஷீன் என்று அழைக்கப்படுவது கேனான். கேனான் காப்பியர்களின் விற்பனை இந்தியாவில் ஜெராக்ஸ் காப்பியர்களை விட அதிகம்) கடை உள்ளது. டி டி பி கடைகளும் தான்.  அவற்றில் விற்பனையும் அமோகம் என தெரிகிறது. அதற்கேற்றார் போல் ஸ்டேஷனரி கடைகளும் பெருகியிருக்கின்றன. எப்படியிருப்பினும், இன்னும் சில வருடங்கள் வரை காகிதத்தின் உபயோகம் அதிகரிக்க செய்யுமே தவிர குறையாது.
 நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பலார்புர் இன்டஸ்ரியும் பேப்பர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றது. பேப்பர் உற்பத்தி மற்றும் விற்பனையில் தற்போது முதலிடம் இக்குழுமம் தான். இமேஜ் பிராண்டு இவர்களுடையது தான்.

இக்குழுமம் தன்னுடைய அடுத்த போட்டியாளரை விட முன்று மடங்கு விற்பனை செய்து வருகிறது. நிகர இலாபமும் முன்று மடங்கு அதிகம்.
காகிதங்கள்  உற்பத்தியில் உலகில் முதல் இருநுாறு குழுமங்களில் இந்தியா சார்பில் இக்குழுமம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடதக்கது.

 கடைசி காலாண்டு அறிக்கை வரை இக்குழுமத்தின் விற்பனை சீரான வளர்ச்சி கண்டு வருகிறது. காகித உற்பத்தி துறையில் இருக்கும் இதன் முக்கிய போட்டியாளர்கள் :
1. தமிழ்நாடு நியுஸ்பிரிண்ட்

2. ஜே.கே. பேப்பர்

 இன்னும் சிலர் இருக்கின்றார்கள். ஆனால் மேற்கண்ட இரு குழுமங்கள் மட்டுமே இன்னும் சில வருடங்களில் பலார்புர் குழுமத்திற்கு கடும் போட்டியை கொடுக்கக் கூடியவை. இக்குழுமங்களை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

பலார்புர் குழுமம் ரு 28-30 விலையில் வாங்கலாம்.  நீண்ட கால முதலீட்டிற்கானது. குறுகிய காலத்தில் ரு 50 தாண்டும் சாத்தியகூறு உள்ளது. குறைந்தது இரு வருடங்கள் வரை வைத்து இருக்கும் அளவு பொறுமை இருந்தால் நல்ல இலாபம் கொடுக்கக்கூடியது. இப்பங்கின் முக மதிப்பு ரு 2. தற்போது (9.5.08 ) புக் வேல்யுவைவிட குறைவாக சந்தை விலை உள்ளது. வருடா வருடம் குறைந்தது 30% (ரு .60)  டிவிடென்ட் கிடைக்கும் என நம்பலாம்.

அடுத்த ஐந்தாண்டுகளில் இத்துறையின் வளர்ச்சி மற்றும் இதன் போட்டியாளர்கள் பற்றிய விவரங்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Add comment May 12, 2008


twit…twit…twit

Recent Posts

Top Posts

Recent Comments

Category Cloud

Fundamental Analysis Hunter's Mind Market Analysis Tiger Cubs Uncategorized கதை காமிக்ஸ் செய்தி அலசல் தின வணிகம் திரை விமர்சனம் நகைச்சுவை புத்தக விமர்சனம் வேதாள நகரம்

Pages

Archives

 

May 2008
M T W T F S S
« Apr   Jun »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031