Archive for May 10th, 2008
Hunters don’t trust Lions
பங்கு சந்தையில் புதிதாக நுழையும்போது தின வணிகம் உடன் செய்யக்கூடாது என நிறைய பேர் எச்சரிக்கப்பட்டு, அவர்களும் முதல் சில மாதங்கள் தின வணிகம் செய்யக்கூடாது என்று முடிவு செய்து கொண்டுதான் வருகின்றார்கள். முதல் சில நாட்கள் Paper Trade செய்கின்றார்கள். சிலபேர் சில மணி நேரம் தான். இதில் முகவர்களின் அலுவலகத்தில் மற்றவர்கள் தின வணிகம் செய்வதை பார்க்கும்போது தாமும் இறங்க வேண்டும் என இறங்குகிறார்கள்.
ஏதேனும் ஒரு ஊடகத்தில் அல்லது நெருங்கிய நண்பர் முலமோ நம்பகமான tip கிடைக்கின்றது எனில் தின வணிகத்தில் ஈடுபடுவது தவறில்லை. ஆனால் அதற்கு முன் அப்பங்கினை பற்றி சில விவரங்களாவது தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்தது சென்ற வாரம் அப்பங்கின் விலை ஏற்ற இறக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக ஒவ்வொரு முகவர்களின் அலுவலகத்திலும், முதலீட்டாளர்களில் ஒரு unelected தல அல்லது பங்கு சந்தை பிதாமகர் ஒருவர் இருப்பார். அங்கு வர்த்தகம் செய்யும் எல்லோரும் அவரிடம் ஆலோசனை கேட்பார்கள்.
அடுத்த வாரம் என்ன நடக்கும்?
நாளைக்கு இந்த பங்கு விலையேறுமா?
அவரும் சளைக்காமல் தன் அனுபவ அறிவினை அனைவருக்கும் நாலாபுறத்திலும் இறைப்பார்.
பங்கு சந்தையில் புதியதாய் நுழையும்போது எல்லா விவரங்களும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதில் தவறில்லை. அது விவரங்களுடன் நின்று விட வேண்டும். பங்கு சந்தை செயல்படும் விதம், முகவர்களின் போக்கு, பணம் செலுத்தும் விதம், வங்கிகளின் செயல்பாடு இது போன்ற விவரங்கள்.
நீங்கள் முதலீடு செய்யும் பங்குகளை நீங்கள் ஆலோசனையாக பெறுவது தவறில்லை. ஆனால் அப்பங்குகளை உடனடியாக முதலீடு செய்யாமல் அப்பங்கினை பற்றி ஒரளவு விவரங்களாவது தெரிந்து கொள்ள முற்பட வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் பங்கு மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை எப்போது ஏற்படும்? எல்லா விவரங்களும் மற்றவர்கள் முலமாக தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் உங்களின் சொந்த முயற்சியில் தெரிந்துகொள்ளும்போது.
அவர் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்ற மனப்பான்மை மிகவும் ஆபத்தானது. அப்போது நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்புகின்றீர்கள். பங்கு சந்தை உங்களுக்கு சூதாட்டமாகிறது. சூதாட்டத்தில் நிரந்தர வெற்றியாளர் யாருமில்லை.
தற்போது சிறிது சுயபுராணம்:
நான் வணிகம் செய்து கொண்டிருக்கும் முகவரின் அலுவலகத்திலும் ஒரு பங்கு சந்தை சிங்கம் இருந்தார். எல்லோரும் அவரிடம் எல்லா விஷயங்களுக்கும் ஆலோசனை கேட்பார்கள்.
ஒருநாள், (நடந்தது ஆறு வருடங்களுக்கு முன், தேதி, மாதம் நினைவில்லை) தீடீரென காலை அலுவலகம் வந்த அவர் அனைவரிடமும் முன்று பங்குகளை குறிப்பிட்டு அனைத்துமே Sure win tips என்று சொன்னதுமே அனைவருமே உடன் வங்கியில் உள்ள பணம், வேறு ரொக்கம் என திரட்டி அப்பங்குகளை விரட்டி விரட்டி வாங்கினார்கள். என்னை தவிர. காரணம், திமிர். இவர் என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்பது தான்.
சந்தை இரண்டாம் நாள் தடுமாறியது. முன்றாம் நாள் பல்யடித்தது. அனைவரும் அனைத்து பங்குகளையும் விற்றனர். நிறைய நஷ்டம். சிங்கத்தையும் அசிங்கப்படுத்தினர்.
ஆனால் ஒரே வாரத்தில் சந்தை மீண்டும் மேலெழும்பியது. இரண்டாம் வாரத்தில் சந்தையில் Star Performance கொடுத்தது அவர் கூறிய முன்று பங்குகள்தான்.
1 comment May 10, 2008
12.05.2008
நேற்று சந்தை நுாறு புள்ளிகளுக்கும் மேல் இறங்கியுள்ளதால், திங்கள் கிழமையன்று Negative ஆக ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன். கடந்த வாரத்தில் short position எடுத்துள்ள துறைகளில் காளைகள் சந்தையை ஏற்ற முயல்வார்கள். ஏதேனும் Positive செய்தியை எதிர்பார்க்கிறார்கள். ஆசிய சந்தைகளோ அல்லது உலக சந்தைகளோ முன்னேறும் பட்சத்தில் அன்றைய தினம் சந்தை 40 புள்ளிகளுக்கு மேல் முடிய வாய்ப்புள்ளது. மதியத்திற்கு மேல்தான் சந்தையின் போக்கை தீர்மானிக்க முடியும். காலை வழக்கம்போல் Selling Pressure தான்.
ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒன்று அல்லது இரு துறைகளை சார்ந்த பங்குகளே சந்தையின் போக்கை தீர்மானிக்கும். வரும் வாரம் Telecommunication மற்றும் Realty போன்ற துறைகளை சார்ந்த பங்குகளே தீர்மானிக்கும் என நினைக்கின்றேன். . முக்கியமான பாரதி ஏர்டெல்(Bharti Airtel) மற்றும் டி எல் எப் (DLF) , யுனிடெக் (Unitech).
பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் அரசு சார்பாக ஏதேனும் ஒரு உறுதியான நிலை வராத பட்சத்தில் அத்துறையை சார்ந்த பங்குகள் சந்தையை ஏறவிடாமல் தடுக்கக் கூடிய வாய்ப்புள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ். அப்பங்கானது நிப்டி மற்றும் சென்செக்ஸ் துறையில் Heavyweight ஆனதால் சந்தையை கீழ்நோக்கி இழுக்கும்.
தற்சமயம், கச்சா எண்ணெய் விலையேற்றத்தை குறித்து அரசின் நிலை, டாலர்-ருபாய் மதிப்பு இவைகளே அடுத்த வாரம் சந்தையை முன்நோக்கி அல்லது பின்நோக்கி கொண்டு செல்லும் காரணிகள்.
அப்போலா டயர் நல்ல காலாண்டு அறிக்கையினை கொடுத்துள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றத்தை குறித்து அரசின் நிலை Positive ஆக இருக்கும் பட்சத்தில் டயர் பங்குகளானது Positive wave சந்திக்க கூடும்.
4 comments May 10, 2008