Archive for May 1st, 2008
Bulls, Bears, Monkeys and Tigers
முதலில் ஒரு கேள்வி.
பங்கு சந்தை என்பது சூதாட்டமா?
நான் பங்கு சந்தையில் முதன்முதலாக இறங்கும்போது (1996-97) நான் பார்த்த சக முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டில் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அப்போது தின வணிகம் பெருமளவில் தமிழ்நாட்டில் இல்லை.
ஆனால் ஊக வணிகம் பெருமளவில் விளையாடியது. அதை நம்பி “மன்னார் கம்பெனி” களை நிறைய வாங்கி நஷ்டப்பட்டார்கள்.
“சார், இந்த விலையில So and So Company வாங்குங்க. இன்னும் ஒரு மாசத்தில அவன் எங்கேயோ போக போறான்”.
உண்மை. காணாமலே போனது.
இப்போதைய முதலீட்டாளர்களில் பலர் தற்போதைய காளை சந்தையை நம்பி ( ஆகஸ்ட் 2007 முதல்) இறங்கியுள்ளனர். அவர்கள் பங்கு சந்தையை Fast Food மாதிரி பார்க்கின்றார்கள். ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீட்டின்போது எத்தனையோ ஆயிரம் புதிய முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் இணைந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் ( நான் பார்த்தவரை) ரு.450க்கு பங்கு வெளியிட்டில் பெற்று பங்கு சந்தையில் பட்டியலிடும் தினமே ரு.800 அல்லது ரு.1000-ல் விற்றுவிடலாம் என்ற எண்ணத்தில்தான் விண்ணப்பம் அனுப்பினர்.
ஊடகங்களும் தங்கள் Recommendations ஒரு மாத காலம் முதல் ஆறு மாத காலம் வரை கொடுக்கின்றார்கள்.
டிசம்பர் 2007-ஆம் மாத வணிக ஊடகங்களின் பதிவுகளையும் சனவரி 2008 மாத வணிக ஊடகங்களின் பதிவுகளையும் நீங்கள் பார்த்தால் உங்களுக்கு முரண்பாடு தெரியும்.
காளை தெரியும். கரடி தெரியும். குரங்கு? ஆம். குரங்கு கூட பங்கு சந்தையில் உண்டு. நம் மனதில் உள்ளது. ஒரு பங்கினை வாங்கி விற்கும்போது நம் மனதில் குரங்கின் லீலைகளை நாம் காணலாம்.
இது சரியான விலைதானா?
இப்போ விற்கலாமா?
பத்து நிமிடம் கழித்து விற்றால் இன்னொரு 5 பர்சென்ட் ஏறுமோ?
போச்சு. நல்லா மாட்டிக்கிட்டேன்.
குரங்கின் லீலைகளையும், புலியின் வேட்டை நுட்பங்களையும் போக போக இப்பகுதியில் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதில் :
“ஆம், நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பும் பட்சத்தில்.”
4 comments May 1, 2008
02.05.2008
மின்சார கண்ணா படத்தில் வில்லன் தன் அடியாள்களை பார்த்து “யார் அந்த காரியத்தை செய்தது” என்று கேட்கும்போது அடியாள்கள் ஒருவரை ஒருவர் சந்தேகமாக பார்க்கும் காட்சியை பார்த்திருக்கிறீர்களா? ஏறக்குறைய சந்தையும் அப்படிதான் இருக்கின்றது.
அமெரிக்க சப் பிரைம் பிரச்சினை -
பெட் ரேட் குறைப்பு -
கச்சா எண்ணெய் விலை
Inflation ( இப்பிரச்சினையில் மட்டும் ஒரு காமெடி உள்ளது. நமது நாட்டின் மாண்புமிகு அமைச்சர் ஒருவர் கென்யா (என்றுதான் நினைக்கின்றேன்) விட நம்நாட்டில் விலைவாசி உயர்வு குறைவு என அற்புதமான கருத்தை கூறியிருக்கின்றார்.
மேற்கண்ட பிரச்சினைகளை பற்றி பெரும்பாலும் ஊடகங்கள் எவ்வாறு கூறுகின்றதோ அப்படியே சந்தை அதை எதிரோலிக்கின்றது.
எது எப்படியோ, சந்தை Positive ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன். தின வணிகம், ஊக வணிகம், Selling Pressure தற்போது அதிகமாக உள்ளதால் முடிவது எப்படி இருக்கும் என்பது நண்பகல்தான் தெரியும்.
FMCG பங்குகள் நல்ல காலாண்டு அறிக்கைகள் அளித்திருக்கின்றன. டாபர்,ஹீந்துஸ்தான் யுனிலீவர், மரிகோ, கொட்ரேஜ் கன்ஸ்யூமர் போன்ற பங்குகளை நீண்ட கால முதலீட்டிற்காக வாங்கலாம்.
2 comments May 1, 2008